மேன்படுத்தப்பட்ட அம்சங்கள்.. அட்டகாசமான டெக்னாலஜி.. வெளியானது KTM 390 Duke 2024 - விலை என்ன தெரியுமா?

Ansgar R |  
Published : Aug 25, 2023, 08:42 AM ISTUpdated : Aug 25, 2023, 08:53 AM IST
மேன்படுத்தப்பட்ட அம்சங்கள்.. அட்டகாசமான டெக்னாலஜி.. வெளியானது KTM 390 Duke 2024 - விலை என்ன தெரியுமா?

சுருக்கம்

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பைக் தயாரிப்பு நிறுவனமான KTM பைக்களுக்கு, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்நிலையில் அந்த நிறுவனம் தற்பொழுது ஒரு புதிய மாடல் பைக்கை அறிமுகம் செய்துள்ளது.

உலக அளவில் கேடிஎம் நிறுவனம் தங்களது புதிய Duke 390 (2024) மாடல் பைக்கை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதத்தில் இந்த பைக் மக்களின் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பழசு Vs புதுசு

இந்த புதிய KTM Duke 390, முற்றிலும் பழைய மாடல் வண்டியில் இருந்து மாறுபட்டு உள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சரி எந்த வகையில் இருந்து மாறுபட்டுள்ளது என்று பார்க்கலாம், பழைய மடலை விட பெரிய அளவிலான பெட்ரோல் டேங்குகளும், பிரிக்கப்பட்ட (Split Seat)சீட்டு அமைப்புகளும், முன்பை விட வலுவான கட்டுமஸ்தான பெரிய உடலையும் இது கொண்டுள்ளது. 

Tesla : டெஸ்லா மலிவு விலை கார் இந்தியாவிற்கு வரப்போகுது.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எவ்வளவு தெரியுமா?

வண்டியின் எடை, சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் 

சுமார் 165 கிலோ எடை கொண்ட இந்த பைக் முற்றிலும் காஸ்ட் அலுமினியம் மூலம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய டூக் 390 பைக்கில், 43mm USD டெலஸ்கோப் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது என்றும், பின்புறம் மோனோ ஷாப் செட்டப் பொருத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் முன்புற சக்கரங்களில் 320mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 240mm டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. 

வீல் அமைப்பு மற்றும் பிற அம்சங்கள் 

17இன்ச் அலாய் வீல்கள் கொண்ட இந்த வண்டியில், ப்ளூடூத் அம்சம் கொண்ட ஒரு 5 இன்ச் TFT இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. வழக்கம்போல ஸ்மார்ட்போன்களை இதனுடன் இணைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. 

என்ஜின் திறம் மற்றும் விலை 

399cc சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்ட் என்ஜின் கொண்டு சக்தி பெரும் இந்த வண்டி, ஆறு கியர் பாக்ஸ் செட்அப்புடன் களமிறங்க உள்ளது. இன்னும் ஓரிரு மாதத்தில் உலக அளவில் விற்பனைக்கு வரும் இந்த பைக்கின் ஆரம்ப விலை சுமார் மூன்று லட்சம் ரூபாய் (இந்தியாவில்) இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

TVS : ஸ்மார்ட் ஆப்ஷன்கள்.. தெறிக்கும் ஸ்பீட் - எலக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ் போட்டியில் முந்தும் டிவிஎஸ் !!

PREV
click me!

Recommended Stories

ரூ.1.65 லட்சம் தள்ளுபடி.. 293 கிமீ ரேஞ்ச் கொண்ட மலிவு விலை டாடா எலக்ட்ரிக் கார்
கருப்பு - தங்க நிறத்தில் மின்னும் ஸ்பெஷல் RDX எடிஷன்.. டிவிஎஸ் கொடுத்த திடீர் சர்ப்ரைஸ்