இந்தியாவில் ரூ.8.49 லட்சம் விலையில் Kawasaki Ninja ZX-4R பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் முதல் டெலிவரி தொடங்கவுள்ளது
கவாஸாகி நிறுவனம் தனது புதிய இன்லைன் 4-சிலிண்டர் சூப்பர்ஸ்போர்ட் மாடலான நிஞ்ஜா இசட்எக்ஸ்-4ஆர் மாடலை இந்திய சந்தையில் ரூ.8.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. உயர் செயல்திறன் கொண்ட இந்த ப்ரீமியம் பைக், முழுமையாக கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக இந்திய சந்தையில் கிடைக்கிறது. நிஞ்ஜா 650 மற்றும் நிஞ்ஜா 400க்கு இடையில் கவாஸாகியின் இந்திய வரிசையில் இடம் பிடித்துள்ளது.
பண்டிகை காலத்தை ஒட்டி, அக்டோபர் முதல் வாரத்தில் பைக் டெலிவரி தொடங்கும் என்று கவாஸாகி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
சுவாரஸ்யமாக, கவாஸாகி நிஞ்ஜா இசட்எக்ஸ்-4ஆர் ஒரு தனி மாறுபாட்டில் வழங்கப்படுகிறது, இதில் பிரத்யேக மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் கலர் ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது. கவாஸாகி இந்தியாவின் பாரம்பரியத்திற்கு ஏற்ப ஸ்போர்ட்ஸ் பைக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. Ninja ZX-10R மற்றும் Ninja ZX-6R போன்ற அனுபவத்தை Ninja ZX-4R வழங்கும் என கவாஸாகி நிறுவனம் கூறுகிறது.
நிஞ்ஜா ZX-4R பைக்கானது, 399 சிசி லிக்விட்-கூல்டு, 4 ஸ்ட்ரோக், இன்-லைன் நான்கு சிலிண்டர் எஞ்சின் மூலம், 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் ஸ்லிப்பர் கிளட்ச் அம்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வலுவான எஞ்சின் 14,500 ஆர்பிஎம்மில் 76 பிஎச்பி உச்ச ஆற்றலை உருவாக்குகிறது. இருப்பினும், 79 பிஎச்பியை எட்டும் திறன் கொண்டது. மேலும் 13,000 ஆர்பிஎம்மில் 39 என்எம்-யை உருவாக்குகிறது. இந்த செக்மெண்டின் மிகவும் சக்திவாய்ந்த 400 சிசி மாடலாக இது உள்ளது.
முன்பக்கம் USD டெலெஸ்கோபிக் போர்க், மற்றும் பின்புற மோனோ ஷாகப்சர்வர் ஆகியவை சஸ்பென்ஷனைக் கையாள்கிறது. இந்த பைக் ட்ரெல்லிஸ் பிரேம் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. 290 மிமீ முன் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 220 மிமீ பின்புற டிஸ்க் பிரேக் என டூயல் டிஸ்க் பிரேக், டூயல்-சேனல் ஏபிஎஸ் அமைப்பு, 17 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன.
மிகவும் விலை குறைந்த ஹார்லி டேவிட்சன் பைக் இதுதான்.. Harley-Davidson X440 விலை எவ்வளவு தெரியுமா.?
Ninja ZX 10R பைக்கின் டிசைன் போன்றே நிஞ்ஜா ZX-4Rயும் இருக்கிறது. இதில் முன்பக்கம் ட்வின் LED ஹெட் லைட், LED டைல் லைட், சூப்பர் பேரிங் டிசைன், முன்பக்கம் Ram Air Intake வசதி, நிஞ்ஜா பைக்குகளுக்கே உரித்தான ஷார்ப் ஸ்டைலிங் இடம்பெற்றுள்ளது. முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் Sport, Road, Rain, and Rider என ஒருங்கிணைந்த ரைடிங் முறைகளுடன் வருகிறது.
நிஞ்ஜா ZX-4R சூப்பர் ஸ்போர்ட் மாடல் பைக்கில் 4.3 இன்ச் TFT ஸ்பீடோமீட்டர் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதி, மியூசிக் கன்ட்ரோல், நோட்டிபிகேஷன், நேவிகேஷன், ட்ரெக்சன் கன்ட்ரோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, Circuit Mode போன்றவை இருக்கின்றன.
இதன் விலை, இந்திய சந்தையில் ரூ.8,49,000 லட்சத்திற்கு (எக்ஸ்ஷோரூம் விலை) விற்பனைக்கு வரவுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் பைக் டெலிவரி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.