ஹூண்டாய் ஐயோனிக் 5 கார் ரூ. 44.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. ஆனால், பின்னர் இதன் விலை ரூ.45.95 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) உயர்ந்துவிட்டது.
கொரிய கார் நிறுவனமான ஹூண்டாய் இந்தியாவில் தனது ஐ யோனிக் 5 எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் 500 கார்கள் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், அடுத்த நான்கு மாதங்களில் ஆயிரத்தை எட்டியிருக்கிறது.
ஹூண்டாய் ஐயோனிக் 5 கார் ரூ. 44.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. ஆனால், பின்னர் இதன் விலை ரூ.45.95 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) உயர்ந்துவிட்டது. இருப்பினும் இந்த எலெக்ட்ரிக் காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.
undefined
Ioniq 5 காரில் மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்ட 72.6kWh பேட்டரி இருக்கிறது. 216bhp மற்றும் 350Nm உச்ச முறுக்குவிசையைக் கொண்டதாக இருக்கும். ARAI-சான்றளிக்கப்பட்ட இந்தக் கார், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 631கிமீ வரை ஓடக்கூடியது
சியாரா ரிலீஸ் குறித்து சர்ப்ரைஸ் அப்பேட்! மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு சவால் விடும் டாடா!
இந்தக் மின்சார காரின் பேட்டரி 350kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் வெறும் 18 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும் என்று ஹூண்டாய் நிறுவனம் கூறுகிறது.
அடாஸ் (ADAS) தொழில்நுட்பம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே ஆகியவற்றுடன் சிறப்பான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும் இந்த ஹூண்டாய் எலக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் ஐ யோனிக் 5 எலக்ட்ரிக் கார் கியா நிறுவனத்தின் இவி6 எலெக்ட்ரிக் காருக்கு கடும் போட்டியாக இருக்கிறது. Kia EV6 கார் ரூ.60.95 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், ஐயோனிக் 5 காரின் விலை அதைவிடக் குறைவாக இருப்பது இந்தக் காரின் விற்பனை சூடுபிடிக்கக் காரணமாக உள்ளது.
சக மாணவரை 108 முறை காம்பஸால் குத்திக் கிழித்த 4ஆம் வகுப்பு மாணவர்கள்!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D