பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, தற்போது இந்தியாவில் தனது மலிவு விலை ஆட்டோமேட்டிக் கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அந்த புதிய கார் குறித்த முழு தகவலை இந்த பதிவில் விளக்கமாக காணலாம்.
ஹோண்டா எலிவேட் என்ற இந்த புதிய எஸ்யூவி கார் இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா எலிவேட் நடுத்தர அளவிலான எஸ்யூவி பிரிவில் உருவாக்கப்பட்டு, இந்திய சந்தையில் சற்று தாமதமாக அறிமுகமாகியிருந்தாலும், அதன் குறைந்த விலை காரமனாக தற்போது நடுத்தர குடும்ப மக்களின் கவனம் இதன் மேல் திரும்பியுள்ளது என்றே கூறலாம்.
எலிவேட் இப்போது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்தியாவின் மலிவான நடுத்தர அளவிலான எஸ்யூவி ஆகும். முன்னதாக இந்தியாவில் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடல் கார் தான் மிகவும் மலிவான ஆட்டோமேட்டிக் காராக திகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சத்குரு ஓட்டும் காரோட விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.. இந்த காரில் இவ்ளோ ஸ்பெஷல் இருக்கா.!!
சிறப்பு அம்சங்கள்
ஹோண்டா எலிவேட் 4312மிமீ நீளம், 1790மிமீ அகலம், 1650மிமீ உயரம், 2650மிமீ வீல்பேஸ் மற்றும் டாப்-கிளாஸ் கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகிய சசிறப்பு அம்சங்களுடன் அறிமுககியுள்ளது. இது 1.5L i-VTEC DOHC பெட்ரோல் எஞ்சின் மூலம் 89 kW (121 PS) ஆற்றலையும், 145 Nm விசையையும் உருவாக்குகிறது, இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7-ஸ்பீடு கன்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன் (CVT) உடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மைலேஜ்
ஹோண்டாவின் இந்த புதிய SUV முறையே 15.31 kmpl மற்றும் 16.92 kmpl எரிபொருள் செயல்திறனை வழங்குவதாக கூறப்படுகிறது.
உட்புற அம்சங்கள்
ஹோண்டா எலிவேட்டில், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் உள்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 7 இன்ச் Full HD டிஸ்பிலே, மேலும் புதிய வகை பிலோடிங் IPS ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. 6 ஏர் பேக்கள், மற்றும் பல சிறப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விலை
ஹோண்டா எலிவேட் எஸ்யூவி இந்தியாவில் ரூ.10.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் விலை) என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல எலிவேட்டின் டாப் வேரியண்டின் விலை ரூ.15.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் விலை).
வாகன ஓட்டிகளே உஷார்.. இதை மீறினால் ஆயிரக்கணக்கில் அபராதம் - காவல்துறை எச்சரிக்கை