டெஸ்லா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையைத் தொடங்குவதற்கான இடங்களில் ஒன்றாக இந்தியாவையும் பரிசீலிப்பதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் செவ்வாய் கிழமை அளித்த பேட்டி ஒன்றில், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு புதிய தொழிற்சாலைக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க இருப்பதாகக் கூறினார். அந்தத் தொழிற்சாலை இந்தியாவில் அமையும் என்ற கேள்விக்கு பதில் அளித்த் அவர், நிச்சயமாக அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
டெஸ்லா இந்தியாவில் ஒரு உற்பத்தித் மையத்தை நிறுவுவதற்கான திட்டங்களைப் பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கடந்த வாரம் ராய்ட்டர்ஸ் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
undefined
உலகின் மிகவும் புகழ்பெற்ற வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டெஸ்லா தனது உலகளாவிய உற்பத்தியை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக மெக்சிகோ நாட்டில் ஒரு ஜிகாஃபாக்டரியைத் திறப்பதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தது.
ரிலையன்ஸ் ஜியோ மார்ட்டில் 1000 ஊழியர்கள் தீடீர் பணிநீக்கம்!
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் எலோன் மஸ்க், செவ்வாய்க்கிழமை புதிதாக கல்வி நிறுவனம் ஒன்றை உருவாக்கும் யோசனையை வெளியிட்டார். அதற்கு ட்விட்டரில் பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
தனக்குப் பின் நிறுவனத்தை மோசமான சூழ்நிலையிலும் சிறப்பாக வழிநடத்திச் செல்லுக்கூடிய நபரைக் கண்டறிந்துள்ளதாகவும் எலான் மஸ்க் கூறி இருக்கிறார். "எதிர்பாராத வகையில் எனக்கு ஏதாவது நேர்ந்தால், இதைச் செய்யுங்கள் என்று வாரியத்துக்குப் பரிந்துரைத்து இருக்கிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் ட்விட்டருக்கான புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்கரினோவை எலான் மஸ்க் அறிவித்தார். அதைத் தொடர்ந்து தற்போது அவர் டெஸ்லாவில் அதிக கவனம் செலுத்துகிறார் என டெஸ்லா வாரிய இயக்குனரான ஜேம்ஸ் முர்டாக் கூறுகிறார். டெஸ்லா தலைவராக சாத்தியமான ஒருவரை எலான் மஸ்க் அடையாளம் கண்டுள்ளார் எனவும் முர்டாக் அண்மையில் தெரிவித்திருந்தார்.
Apple iPhone 11: வெறும் ரூ.9,140க்கு கிடைக்கும் ஆப்பிள் ஐபோன் 11! எங்கே, எப்படி வாங்கலாம்?