
பிரான்சின் பிரபல வாகன நிறுவனம் சிட்ரோயன், தனது பசால்ட் கூப்பே எஸ்யூவியின் புதுப்பிக்கப்பட்ட மாடலை “பசால்ட் எக்ஸ்” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய SUV வாகனம் ரூ.7.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் கிடைக்கிறது.
டாப்-எண்ட் மேக்ஸ் டிரிம் வேரியண்ட் ரூ.11.63 லட்சம் (எம்டி) மற்றும் ரூ.12.90 லட்சம் (ஏடி) விலையில் வருகிறது. பிளஸ் டிரிம் விலை ரூ.9.42 லட்சம் முதல் ரூ.12.07 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் விரும்பினால் 360-டிகிரி கேமரா (₹25,000) மற்றும் டூயல்-டோன் ரூஃப் (₹21,000) போன்ற அம்சங்களையும் தேர்வு செய்யலாம். முன்பதிவு ரூ.11,000 டோக்கன் தொகையுடன் தொடங்கியுள்ளது.
புதிய டிசைன் & உள்ளமைப்பு
புதிய பசால்ட் எக்ஸின் டெயில்கேட்டில் “X” லோகோ இடம்பெற்றுள்ளது. வாகனத்தின் சைஸ், வடிவமைப்பு மாறாதபோதும், உள்ளமைப்பில் பெரிய மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேக்ஸ் டிரிம் வேரியண்ட் டான்-அண்ட்-பிளாக் அப்ஹோல்ஸ்டரி, லெதரெட் டேஷ்போர்டு மற்றும் வெண்கல நிற டிரிம் பீஸ்கள் உள்ளது. இதனால் கார் உள்ளமைப்பு அதிக ஆடம்பரமாகவும் ஸ்டைலிஷாகவும் தெரிகிறது.
புதிய டிஜிட்டல் அசிஸ்டண்ட்
இந்த மாடலின் முக்கிய ஹைலைட் CARA எனப்படும் புதிய டிஜிட்டல் அசிஸ்டண்ட் ஆகும். இது போக்குவரத்து தகவல்கள், வழித்தட பரிந்துரை, விமான நிலை கண்காணிப்பு, அழைப்புகள், SOS, மல்டிமீடியா, வாகன ஆரோக்கிய அப்டேட்கள் போன்றவற்றை வழங்கும். ஆனால், இந்த அம்சம் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும். மேலும், இது ஆரம்ப முன்பதிவுகளுக்கே வழங்கப்படுகிறது.
மேம்பட்ட அம்சங்கள்
பசால்ட் எக்ஸ்-இல் ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், க்ரூஸ் கண்ட்ரோல், காற்றோட்டமான இருக்கைகள், கீலெஸ் என்ட்ரி, புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப், எல்இடி ஃபாக் லாம்ப்ஸ், ஆம்பியன்ட் லைட்டிங் போன்ற பல பிரீமியம் அம்சங்கள் உள்ளன. விருப்பத்தேர்வாக 360-டிகிரி கேமரா கூட வழங்கப்படுகிறது. இந்த SUV வாகனம் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டைல், கம்ஃபர்ட், மற்றும் பாதுகாப்பை ஒரே நேரத்தில் வழங்குகிறது.
எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன்
சிட்ரோயன் பசால்ட் எக்ஸ் இரண்டு பெட்ரோல் எஞ்சின் விருப்பங்களுடன் வருகிறது. 1.2 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் (110 bhp) – 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் கிடைக்கிறது. எண்ட்ரி-லெவல் வேரியண்ட்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் (82 bhp) – 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கேற்ற எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் விருப்பத்தை தேர்வு செய்யலாம்.