
Bajaj pulsar N160: இந்தியாவில் ஸ்டைலான, பட்ஜெட் பைக்னு சொன்னாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பஜாஜ் பல்சர்தான். குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் பஜாஜ் பைக்குகளுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. இந்நிலையில், பஜாஜ் நிறுவனம் டூ-வீலர் மார்க்கெட்டில் மீண்டும் ஒருமுறை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் N160 பைக்கில் S மற்றும் SS என்ற இரண்டு புதிய, பவர்ஃபுல்லான வேரியன்ட்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. பல நாட்களாக புதிய வேரியன்ட் பைக்கிற்காக காத்திருந்த டூ-வீலர் பிரியர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.
இந்த பைக்கில் வெளிப்புறத் தோற்றத்தில் சில மாற்றங்கள் மட்டுமின்றி, மெக்கானிக்கல் மற்றும் இன்ஜினிலும் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, பல்சர் N160 பைக்கில் இப்போது 4-வால்வ் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பைக் அதிக பவர்ஃபுல்லாகவும், சிறந்த மைலேஜையும் வழங்கும். இதற்கு முன்பு 2-வால்வ் தொழில்நுட்பம் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
பல்சர் N160 எப்போதுமே ஸ்டைலான பைக்குகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இப்போது சில புதிய நிறங்கள் மற்றும் புதிய கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளன. அதே சிக்னேச்சர் LED புரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் ஷார்ப்பான DRL-கள் இதில் உள்ளன. பைக்கின் டேங்க் மற்றும் சைடு பேனல்கள் பைக்கிற்கு ஒரு அசத்தலான தோற்றத்தைக் கொடுக்கின்றன. இதில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. மேலும், ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதியும் இதில் சப்போர்ட் செய்கிறது. உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் பைக்கை இணைத்துக்கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கால், மெசேஜ் அலெர்ட் மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் போன்ற பலன்களைப் பெறலாம்.
இது மட்டுமின்றி, பல்சர் N160 பைக்கில் USB சார்ஜிங் போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பைக் ஓட்டும்போதே உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்துகொள்ளலாம். பாதுகாப்பை பொறுத்தவரை, டூயல்-சேனல் ABS மற்றும் வெவ்வேறு ரைடிங் மோடுகளும் இதில் உள்ளன.
வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் தேவைக்கேற்ப பல்சர் S மற்றும் SS என இரண்டு வேரியன்ட்களை பஜாஜ் கொண்டு வந்துள்ளது. பட்ஜெட்டில் ஒரு நல்ல 160cc பைக் தேடுபவர்களுக்கு S வேரியன்ட் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதே சமயம், டாப்-கிளாஸ் அம்சங்கள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு விரும்புபவர்களுக்கு SS வேரியன்ட் பொருத்தமாக இருக்கும்.
S வேரியன்ட் விலை: ₹1,33,511
SS வேரியன்ட் விலை: ₹1,42,585
பல்சரின் இந்த புதிய மாடல், தற்போது சந்தையில் உள்ள TVS Apache RTR 160 4V மற்றும் Hero Xtreme 160R போன்ற பைக்குகளுக்குக் கடுமையான போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.