ராயல் என்ஃபீல்டுக்கு ஆப்பு வைத்த ஹோண்டா.. 2023 ஹைனெஸ் சிபி350 மாடலில் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

By Raghupati R  |  First Published Mar 13, 2023, 3:28 PM IST

ஹோண்டா நிறுவனம் 2023 ஹைனெஸ் சிபி350 மற்றும்  2023 ஹைனெஸ் சிபி350ஆர்எஸ் மாடல் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.


ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா இன்று ஆன் - போர்டு டயக்னாஸ்டிக் (OBD) 2023 ஹைனெஸ் சிபி350 மற்றும் சிபி350ஆர்எஸ் மாடல்களை அறிமுகப்படுத்தியது. 

2023 ஹைனெஸ் சிபி350 (2023 H'ness CB350) விலை ரூ. 2,09,857 (எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி), 2023 ஹைனெஸ் சிபி350ஆர்எஸ் (2023 CB350RS) விலை ரூ.2,14,856 (எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி) இல் தொடங்குகிறது. தற்போது இரண்டு பைக்குகளுக்கும் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

மேலும் அவை மார்ச் இறுதிக்குள் BigWing டீலர்ஷிப்களில் கிடைக்கும். 2023 ஹைனெஸ் சிபி350 மாடல் DLX, DLX Pro மற்றும் DLX Pro Chrome என மூன்று வகைகளைக் கொண்டுள்ளது. அவற்றின் விலைகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. (எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி).

டிஎல்எக்ஸ் - ரூ 2,09,857

DLX Pro - ரூ 2,12,856

DLX Pro Chrome - ரூ. 2,14,856

2023 ஹைனெஸ் சிபி350ஆர்எஸ் மூன்று வகைகளையும் கொண்டுள்ளது. DLX, DLX Pro மற்றும் DLX Pro டூயல் டோன். பின்வருபவை அவற்றின் விலைகள் (எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி).

டிஎல்எக்ஸ் - ரூ 2,14,856

DLX Pro - ரூ 2,17,857

டிஎல்எக்ஸ் ப்ரோ டூயல் டோன் - ரூ.2,17,857

இரண்டு மாடல் பைக்குகளும் ஒரே 348.36சிசி, ஏர்-கூல்டு, 4-ஸ்ட்ரோக், OHC, சிங்கிள்-சிலிண்டர், OBD ஃபேஸ் II இன்ஜின் மூலம் இயக்கப்படும் விதத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இது 21PS அதிகபட்ச ஆற்றலையும் 30Nm உச்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2023 ஹைனெஸ் சிபி350 மற்றும்  2023 ஹைனெஸ் சிபி350ஆர்எஸ் இன் குறிப்பிடத்தக்க அம்சங்களில் Honda Selectable Torque Control (HSTC), Honda Smartphone Voice Control System (HSVCS), அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், மேம்பட்ட டிஜிட்டல்-அனலாக் மீட்டர், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், டூயல்- சேனல் ஏபிஎஸ் மற்றும் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் சுவிட்ச் போன்ற பலவசதிகளுடன் வருகிறது.

இதையும் படிங்க..Hyundai : கார் வாங்க போறீங்களா.? விலை குறையுது தெரியுமா?.. உங்களுக்கான குட் நியூஸ்.. முழு விபரம் உள்ளே

click me!