போயர் வகை ஆடுகளை பற்றி உங்களுக்கு தெரிந்ததும், தெரியாததும்...

 |  First Published Dec 2, 2017, 1:13 PM IST
you should know about boer goats



 

போயர் ஆடுகள்

Latest Videos

undefined

போயர் ஆடுகளின் பூர்விகம் தென்னாப்பிரிக்கா,இந்த வகை ஆடுகள் இறைச்சிக்காக உலக அளவில் அதிகம் வளர்க்கப்படகுடிய ஆடுகள். "நமகிய புஷ்மன்"  மற்றும் "போகு" போன்ற பழங்குடி ஆடுகளின் கலப்பின வகையே இந்த போயர் ஆடுகள்.

இந்த ஆடுகளின் வளர்ச்சி வேகம் மிகவும் பிரமிக்கதக்கது,பிறந்த ஒரு குட்டி 90  நாட்களில் 30  கிலோவாக இருக்கும்.அதிகபட்சமாக ஆண் ஆடுகள் சுமாராக 120  முதல் 140  கிலோ வரை வளரும் தன்மை கொண்டது. 

உடல் பலம் மிகுந்த இந்த ஆடுகள்  கடும் வெயில் மற்றும் மழையை தாங்ககுடியது,இயல்பாகவே அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. மேலும் நாட்டு ஆடுகளை வளர்ப்பதை போலவே இயல்பாக நம் இதை தோட்டம் காடுகளில் வளர்க்க முடியும்.

இறைச்சி ஏற்றுமதிகாக இந்தியாவின் பல ஆட்டு பண்ணைகளில் இந்த ஆட்டு வகைகள் வளர்க்க படுகிறது,.ஆடு இறைச்சி கிலோ ரூ 300-ஐ தாண்டி,ஏதோ பணக்காரர்கள் தான் ஆட்டு  கறி(meat) உண்ண முடியும் என்று உள்ள இன்றைய சூழலில் இந்த ஆடுகளை நாம் வளர்த்தால் மிக்க லாபம் பெறலாம் என்பதில் ஐயமில்லை.   

click me!