ஏன் கோழி வளர்ப்பில் சாய்வான மற்றும் ஆழ்கூளத் தரை அமைக்கப்படுகிறது? தெரிஞ்சுக்க இதை வாசிங்க...

 |  First Published Nov 29, 2017, 12:54 PM IST
Why is the sloping and litter floor set in poultry farming? Read this to read ...



சாய்வான மற்றும் ஆழ்கூளத் தரை அமைப்பு

இந்த முறையில் அடை வைக்க முட்டைகளை உற்பத்தி செய்யப் பயன்படும் கோழிகள், குறிப்பாக இறைச்சிக்கோழிகளை உற்பத்தி செய்யப் பயன்படும் இனப்பெருக்கக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. 

இந்த கொட்டகை அமைப்பில் தரையின் ஒரு பகுதி சாய்வாக அமைக்கப்படுகிறது. பொதுவாக 60% தரை சாய்வாகவும், மீதம் உள்ள தரையில் ஆழ்கூளம் இடப்படுகிறது. தீவனத்தொட்டிகள் மற்றும் தண்ணீர்த் தொட்டிகள் சாய்வான தரை உள்ள பகுதிகளிலும், ஆழ்கூளம் உள்ள பகுதிகளிலும் அமைக்கப்படுகிறது. 

இனப்பெருக்கத்திற்கு பயன்படும் கோழிகளை வளர்க்கும்போது அவைகள் முட்டையிட பெட்டிகளும் வைக்கப்படுகின்றன.

நன்மைகள்

கடினமான தரை அமைப்பில் உற்பத்தி செய்வதை விட இந்த ஒரு குறிப்பிட்ட தரை அளவில் அதிகப்படியான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது.

சாய்வான தரை மட்டும் இருக்கும் கொட்டகைகளில் இருந்து கிடைக்கும் முட்டைகளை விட இந்த தரை அமைப்பில் வளர்க்கப்படும் கோழிகளிலிருந்து கிடைக்கும் முட்டைகளின் குஞ்சு பொரிப்புத் திறன் அதிகம்.

தீமைகள்

இந்த முறை தரை அமைப்பை அமைக்க மற்ற தரை அமைப்புகளை அமைப்பதை விட அதிகப்படியாக செலவாகும்.

ஈக்களின் தாக்குதலால் ஏற்படும் தொல்லைகள் மிகவும் அதிகம்.

click me!