இந்த இலைகள் எல்லாவகை பூச்சிகளையும் விரட்டப் பயன்படும்? எந்தமாதிரி விரட்டும் தெரியுமா?

 |  First Published Oct 5, 2017, 12:20 PM IST
Which of these leaf cannons can be used to drive away all kinds of insects? Do you know what kind of repulsion?



இந்த இலை தழைகள் எல்லாம் பூச்சிகளையும் விரட்டப் பயன்படும்…

1. ஆடு, மாடுகள் உண்ணாத இலை தழைகள் - ஆடுதொடா, நொச்சி

Latest Videos

undefined

2. ஒடித்தால் பால் வரும் இலை தழைகள் - எருக்கு, ஊமத்தை

3. கசப்புச் சுவை மிக்க இலை தழைகள் - வேம்பு., சோற்றுக் கற்றாழை

4. உவர்ப்பு சுவை மிக்க இலை தழைகள் - காட்டாமணக்கு

5. கசப்பு உவர்ப்பு சுவைமிக்க விதைகள் - வேப்பங்கொட்டை. எட்டிக்கொட்டை

இந்த வகையான செடிகளில் இருந்து ஊறல் போட்டு எடுக்கப்படும் சாறு அல்லது காய்ச்சி வடித்த நீர் போன்றவை மிகச் சிறந்த பூச்சி விரட்டியாகச் செயல்படுகின்றன.

இந்தப் பூச்சி விரட்டிகள் ஒருவித ஓவ்வா மணத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக புழுக்கள் மணத்தைக் கொண்டுதான் பயிர்களைக் கண்டறிகின்றன. இதனால் மணம் பிடிபடாத காரணத்தால் அவற்றால் பயிர்களைத் தின்ன முடிவதில்லை.

மூலிகைகளும். சாணம். சிறுநீர் கரைசல்களும் வெறுப்பூட்டும் நெடியை ஏற்படுத்துவதால் பூச்சிகளும். புழுக்களும் விலகிச் செல்கின்றன.

பல பூச்சிகள் உண்ணாமல் பட்டினி கிடக்கின்றன. இன்னும் பூச்சிகள் தவறித் தின்றுவிட்டு வயிற்றுக்குள் தொல்லை ஏற்பட்டு இறந்துவிடுகின்றன. இதனால் முட்டை பொரிப்பது குறைச்து விடுகிறது.

இனப்பெருக்கம் தடைப்பட்டு விடுகிறது. எண்ணிக்கையும் குறைந்து விடுகிறது. தப்பியவை ஊனமடைகின்றன. இவற்றைப் பறவைகள் எளிதில் கொத்திக் சென்று விடுகின்றன.

click me!