வகை வகையான காய்கறிகளை இப்படிதான் பார்த்து வாங்கணும்... எப்படி?

 |  First Published Jun 25, 2018, 1:32 PM IST
What kind of vegetables are you looking for?



சர்க்கரை வள்ளிக்கிழங்கு 

சர்க்கரை வள்ளிக்கிழங்கை விரும்பி சாப்பிடற மக்கள் இருக்கத்தான் செய்றாங்க. கொஞ்சம் கிழங்க உடைச்சு, வாயில போட்டு பார்த்தா, இனிக்கணும். இனிப்பு குறைவாகவோ… கிழங்கு கருப்பு நிறத்துலயோ… இருந்தா, அது தரம் இல்லாத கிழங்கு. 

Tap to resize

Latest Videos

undefined

கோவைக்காய்

கோவைக்காய்க்கு நகர்ப்புறங்கள்ல ரசிகர் மன்றம் வைக்கிற அளவுக்கு வரவேற்பு இருக்கு. முழுக்க பச்சையா இருந்தா மட்டும்தான் வாங்கணும். லேசா சிவப்பு நிறம் இருந்தா, வாங்கக் கூடாது. அதுல சுவை இருக்காது. 

தேங்காய்

தேங்காயை காது பக்கத்துல வெச்சு தட்டிப் பார்த்து முத்தலா… இளசானு கண்டுபிடிப்பாங்க. 

மாங்காய்

மாங்காயையும் தட்டிப் பாக்கணும். சத்தம் வந்தா… கொட்டை சிறிசாவும், சதை அதிகமாகவும் இருக்கும்னு புரிஞ்சுக்கலாம்.

பீர்க்கங்காய். 

அடிப்பகுதி மட்டும் குண்டா இல்லாம, காய் முழுதும் ஒரே சைஸ்ல இருந்தாதான் தரமான பீர்க்கங்காய். 

உருளைக் கிழங்கு

முளை விடாம, பச்சை நரம்பு ஓடாம இருக்குற உருளைக் கிழங்குதான் நல்ல கிழங்கு. அதுலயும், கீறினா தோல் உறியற கிழங்கா பார்த்து வாங்கணும். அப்படி உறியலனா வாங்கக் கூடாது.

கருணைக்கிழங்கு

கருணைக்கிழங்குல (சேனை) பெருசா இருக்கற கிழங்கா பார்த்து வாங்கணும். அதுதான் நல்லா விளைஞ்சி இருக்கும். வெட்டினா… உள்பக்கம் இளஞ்சிவப்பு நிறத்தில இருக்குதாங்கறதையும் உறுதிப்படுத்திக்கோங்க. முளைவிட்டது போல, ஒரு முனை நீண்டுட்டிருக்கற கிழங்குல சுவை இருக்காது.

சுரைக்காய்

சுரைக்காயை நகத்தால் அழுத்தும் போது, நகம் உள்ளே இறங்கினா… இளசு. இல்லாட்டி, முத்தல். அவரைக்காய் விதை, பெரிசா இருந்தா முத்தல். விதை சிறுசா இருந்தாதான் நார் இல்லாம, சுவையா இருக்கும். 

பாகற்காய்

குண்டு, குண்டா இருக்கற பாகற்காயை வாங்கக் கூடாது. அதுல அவ்வளவா சதைப் பிடிப்பு இருக்காது. தட்டையானக் காய்தான் சதைப் பிடிப்பாவும் இருக்கும். ருசியாவும் இருக்கும்.


 

click me!