மூடாக்கு என்றால் என்ன?
undefined
கிடைக்கும் பொருளை கொண்டு மண்ணை 20 cm வரை மூடிவைப்பதற்கு பெயர் மூடாக்கு.
1. தழை மூடாக்கு:
இலை தழைகள் கொண்டு மண்ணை மூடி வைப்பது.
2. சருகு மூடாக்கு:
காய்ந்த சருகுகளை கொண்டு மண்ணை மூடி வைப்பது.
3. உயிர் மூடாக்கு:
நட்ட செடிக்கு அருகில் வேறொரு செடியை நட்டுவைப்பது (எ.கா: கற்றாழை,பூனைக்காளி,Etc..)
4. கல் மூடாக்கு:
எதுவும் கிடைக்காத சூழ்நிலையில் வெறும் கல்லை கொண்டு மூடி மண்ணை வைப்பது!
மூடாக்கு செய்வதால் என்ன பயன்?
1. நீர் ஆவியாதலை குறைக்கும்,
2. களைச்செடிகள் வளர்வதை மட்டுபடுத்தும்,
3. மண்ணுயிர்களுக்கு கூடாரமாய் அமையும்,
4. கடையிசியில் அதுவே மக்கி உரமாகும்.