உயிர் மூடாக்கு என்றால் என்ன? அதன் பயன்கள் என்னென்ன? 

 |  First Published May 12, 2018, 1:59 PM IST
What is life mudakku What are its benefits



உயிர் மூடாக்கு

இரண்டு பயிர்களுக்கு தேவையான இடைவெளி இருக்கும் பொழுது சரியான  அளவு காற்றோட்டமும், சூரிய வெப்பமும் கிடைக்கிறது.  இந்த இடைவேளிலும் வருமானம் தரும் ஒரு முறையே உயிர் மூடாக்கு.

Latest Videos

பசுமை புரட்சியின் விளைவாக உணவு பஞ்ச ஏற்பட்ட கால கட்டத்தில் குறைந்த இடத்தில அதிக விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

இந்த கால கட்டத்தில் பயிர்களுக்கான இடைவெளியின் மகத்துவத்தையும் அவசியத்தை நாம் மறந்து விட்டோம். அதன் விளைவாக அதிக மகசூல் பெற வேண்டி ரசாயன உரங்களையும் பயன்படுத்த வேண்டி நிர்பந்திக்க பட்டோம்.

பயிர் இடைவெளியின்  அவசியம் :

பயிர் செழித்து வளர முக்கிய காரணிகளில் சில காற்றோட்டம் , சூரிய ஒளி, பயிர் வளர்ச்சிக்கு தேவையான அளவுக்கு மட்டும் உரம். முதல் இரண்டையும் நாம் மறந்துவிட்டு விவசாயம் செய்ததின் விளைவாக அதிக அளவு ரசாயன உரம் பயன் படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

அடிப்படையாக ஒரே வகையான பயிர்கள் மிக அருகில் இருப்பதால் நிலத்தில் இருக்கும் சத்துக்களை பெறுவதில் போட்டி ஏற்படுகிறது,இதன் காரணமாக பற்றாகுறை சத்துக்கள்  ஏற்பட்டு ரசாயன உரம் இட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

இதுவே பயிர் இடைவெளி இருக்கும் பொழுது நாம் அளிக்கும் உரம் ( ஜீவமிர்தம்) முலம் தாமாகவே தனக்கு தேவையான சத்துக்களை பெறுகின்றன.

உயிர் மூடாக்கின் நன்மைகள்:

1.நிலத்தின் நீர் ஆவியாதல் தடுக்கபடுகிறது .
2.இதுவும் ஒரு அடுக்கு பயிர் சாகுபடியே .
3.மூடாக்கு பயிர்களின் மூலமும் குறுகியகாலத்தில் வருமானமும் கிடைகிறது .
4. மிக முக்கியமாக நிலத்தின் உயிர் தன்மை காப்பாற்றப்படுகிறது

click me!