ஒட்டுக்கன்று என்றால் என்ன? இந்த முறையினால் என்ன பயன்?

 |  First Published Sep 20, 2017, 1:13 PM IST
What is a graft? What is the use of this method?



இளம் மரக்கன்றினை எடுத்துக்கொண்டு அதன் மேல் புற தண்டில் பாதியை வெட்டி எடுத்துவிட்டு அதில் செங்குத்தாக பிளவினை ஆங்கில V வடிவில் உருவாக்கவும். இப்படி செய்யப்படும் அடிப்பாகத்திற்கு ரூட் ஸ்டாக் என்று பெயர்.

பின்னர் ஏற்கனவே நன்கு முற்றிய ,விளைச்சல் தரும் புங்க மரத்தின் சிறு கிளையை எடுத்துக்கொண்டு அதன் அடிப்பாகத்தினை உளி/ஆப்பு போல சீவி விடவும், இந்த மேல் பாகத்திற்கு சியான் (scion)என்று பெயர்.

Tap to resize

Latest Videos

பின்னர் மேல் பாகத்தினை V வடிவ பிளவில் செறுகி, இதற்கென விற்கப்ப்படும் துணிப்பட்டை / பாலித்தீன் டேப் கொண்டு சுற்றிக்கட்டி விட வேண்டும்.(பழைய துணிகளையும் கிழித்துப்பயன்ப்படுத்தலாம்)

இப்படி செய்வதன் மூலம் இளமரக்கன்றுக்கு முதிர்ந்த மரக்கன்றின் முதிர்ச்சியும், காய்ப்பு திறனும் கிடைக்கும். எனவே விரைவில் காய்க்க துவங்கும். இப்படியான ஒட்டு முறைக்கு "ஒட்டுக்கன்று" என்று பெயர்,

இம்முறையில் தான் ஒட்டு மாங்காய், பலா மரக்கன்று என பல மரக்கன்றுகள், பூச்செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

click me!