மிளகாய் பயிரைத் தாக்கும் பூச்சிகளில் மிளகாய்ப் பேன், பச்சை பேரி, அசுவினி, புகையிலை வெட்டுப்புழு, கடைப்புழு, மஞ்சள் முரனை சிலந்தி ஆகிய பூச்சிகள் முக்கியமானவை ஆகும்.
மிளகாய் பேன்பூச்சி...
மிளகாய் பேன்பூச்சி மயிரிழைகளால் ஆன இறகுகளை உடையது. இந்தப் பூச்சி தாக்கப்பட்ட இலைகளில் சுருக்கங்கள் ஏற்படும். இலைகள் மேல்நோக்கி சுருண்டுவிடும். இலைக்காம்பு நீண்டு விடும். மொக்குகள் எளிதில் நொறுங்கி கீழ் உதிர்ந்துவிடும்.
பூச்சி தாக்கப்பட்ட செடிகள் வளர்ச்சி குன்றுவதோடு, காய்கள் உற்பத்தியும் தடைபடுகிறது.
இவற்றைக் கட்டுப்படுத்த ஊடுபயிராக அகத்தி பயிரிடலாம். நாற்றுகளின் மேற்பரப்பில் நீரை தெளித்து பேன் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
நாற்றுகளின் நடவுக்கு முன்பே தேவையான தடுப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும்.
அசுவினி...
அசுவினி பச்சை நிறத்தில் இருக்கும். அசுவினி தாக்கப்பட்ட செடிகள் வெளுத்துப்போய் நோயால் பாதிக்கப்பட்டது. இலையில் சுருக்கங்கள் ஏற்பட்டு சுருண்டுவிடும்.
இந்த நோய் தாக்கப்பட்ட செடிகள் குட்டையாகிவிடுதல் போன்றவை இந்நோய் தாக்கத்தின் அறிகுறிகளாகும்.
இதனை கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி அல்லது இறக்கையுள்ள அசுவிணிகளை கவர்ந்து அழிக்கலாம்.
புகையிலை வெட்டுப்புழு...
புகையிலை வெட்டுப்புழு இளம்பருவத்தில் இளம்புழுக்கள் கூட்டாக ஒரே இடத்தில் இருக்கும். முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் இலையின் பச்சையத்தை சுரண்டி சாப்பிடும்.
இலைகளை சல்லடை போல் அரித்து வெள்ளை நிறத்தில் இலையில் நரம்புகள் மட்டும் இருக்கும். வளர்ந்த புழுக்கள் இலைகளில் சிறுதுளைகளை விட்டு சாப்பிடும் வளர்ந்த புழுக்களின் தாக்குதல் தீவிரமானால் செடி முழுவதையும் சாப்பிடும்.
இவற்றை கட்டுப்படுத்த வயலை உழுது மண்ணில் புதைந்துள்ள கூட்டுப் புழுக்களை வெளிக் கொணர்ந்து அளிக்க வேண்டும்.
வயல்வரப்பு ஓரங்களில் ஆமணக்கை கவர்ச்சிப்பயிராக பயிரிடவும். ஹெக்டேருக்கு 15 இனக் கவர்ச்சி பொறி வைத்து அந்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பயிருக்கு தேவையான தடுப்பு மருந்துகளைத் தெளிக்கலாம்.
கடலைப்புழு...
கடலைப்புழு உடலின் பக்கவாட்டில் சாம்பலி நிறக்கோடுகளுடன் காணப்படும். இளம் புழுக்கள் இளம்தளிர் மற்றும் இலைகளை சாப்பிடும்.. வளர்ந்த புழுக்கள் காய்களில் துளையிட்டு சாப்பிடுதல் போன்றவை இப்பூச்சி தாக்குதலின் அறிகுறியாகும்.
இவற்றைக் கட்டுப்படுத்த சேதப்படுத்தப்பட்ட காய்கறிகள் மற்றும் வளர்ந்த புழுக்களை சேகரித்து அழிக்கலாம். இனக்கவர்ச்சி பொறியை ஹெக்டேருக்கு 15 என்ற அளவில் வைத்துக் கட்டுப்படுத்தலாம். தேவையான தடுப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும்.
மஞ்சள் முரனைச் சிலந்தி...
மஞ்சள் முரனைச் சிலந்தி முட்டை பருவத்தில் நீள்வட்ட வடிவில் வெள்ளை நிறத்துடன் காணப்படும்.
பூச்சி பருவத்தில் சற்று பெரிதாக நீள்வட்ட வடிவில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலைக்காம்புகள் நீண்டுவிடுதல், இலைகள் கீழ்நோக்கி சுருங்கிவிடுதல், செடியின் வளர்ச்சி குன்றிவிடுதல் போன்றவை இப்பூச்சித் தாக்குதலின் அறிகுறிகளாகும்.
இந்த பூச்சிகளை இனக்கவர்ச்சி பொறியை ஹெக்டேருக்கு 15 என்ற அளவில் வைத்துக் கட்டுப்படுத்தலாம்.