நெற்பயிரை அதிகமாகத் தாக்கும் பாக்டீரியா இலைக்கீற்று நோயை கட்டுப்படுத்த வழிகள்…

 |  First Published May 13, 2017, 1:30 PM IST
Ways to control bacterial leaf disease



தற்போதைய சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிரில் பாக்டீரியா இலைக்கீற்று நோய் அதிகமாகத் தென்படுகிறது.

இதைக் கட்டுப்படுத்தி, நெற்பயிரைக் காக்கும் முறை:

Latest Videos

undefined

தற்போதைய சம்பா பருவத்தில், ஆரம்ப நிலையில் இலையின் சிறு நரம்புகளுக்கிடையில் நீர்க் கசிவான கீற்றுகள் தோன்றி, பின்னர் அவை செம்பழுப்பு நிறமாக மாறும்.

இக்கீற்றுகள், ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இலைகள் முழுவதும் பரவும். பின்னர், இலைகள் காய்ந்து விடும்.

நோய் தோன்றியுள்ள வயல்களில் இருந்து மற்ற வயல்களுக்கு தண்ணீரைப் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.

நோய் தாக்கிய பயிரிலிருந்து விதைகளைச் சேகரிக்க கூடாது.

மண் பரிசோதனைப்படி தழைச்சத்து உரம் இடவேண்டும்.

இந்நோயைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு கோசைட் 200 கிராம் அல்லது 10 சத சாண வடிநீர் அல்லது 120 கிராம் ஸ்ட்ரெப்டோசைக்ளின் சல்பேட் அல்லது டெட்ரா சைக்கிளின் கலவையுடன் 500 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு கலந்து நோயின் தீவிரத்துக்கு ஏற்ப ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தெளிக்க வேண்டும்.

இவற்றைப் பின்பற்றினால், பாக்டீரியா இலைக்கீற்று நோயில் இருந்து நெற்பயிரை பாதுகாக்கலாம்.

click me!