மண்புழு உர பயிர்ச்சத்துக்களின் அளவு
பயிர்ச்சத்துக்களின் அளவானது, நாம் பயன்படுத்தும் மூலப்பொருட்களுக்கு தகுந்தாற்போல் வேறுபடுகிறது. வெவ்வேறு விதமான கழிவுகளை பயன்படுத்தினால், பலதரப்பட்ட பயிர்ச் சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
ஒரே விதமான கழிவுகளைப் பயன்படுத்தினால் குறிப்பிட்ட சத்துக்கள் மட்டுமே அதிக அளவில் இருக்கும். மண்புழு உரத்தில் காணப்படும் பொதுவான பயிர்ச்சத்துக்களின் அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சத்து - அளவு
கால்சியம் + மெக்னீசியம் - 22.67 – 47.6 மி.இக்/100 கிராம்
தாமிரச்சத்து - 2 – 9.5 மி.கிராம்/கிலோ
இரும்புச்சத்து - 2 – 9.3 மி.கிராம்/கிலோ
துத்தநாகச்சத்து - 5.7 – 11.55 மி.கிராம்/கிலோ
கந்தகச்சத்து - 128 – 5485 மி.கிராம்/கிலோ
கரிமச்சத்து - 9.5 – 11.98 சதவீதம்
தழைச்சத்து - 0.5 – 1.5 சதவீதம்
மணிச்சத்து - 0.1 – 0.3 சதவீதம்
சாம்பல்சத்து - 0.15 – 0.56 சதவீதம்
சோடியம் - 0.06 – 0.30 சதவீதம்