மறுதாம்புப் பயிர்களுக்குப் பிறகு:
மறுதாம்புப் பயிர்களுக்குப் பிறகு ஆழமான வேர்கள் செல்லக் கூடிய பயிர்களை சாகுபடி செய்யலாம்.
உருளைக் கிழங்கு, மஞ்சள், பீட்ரூட், கேரட், நெல், வெங்காயம், காய்கறி என சுழற்சி முறையை கடைப்பிடிக்கலாம்.
ஆழமான வேர்களைத் தொடர்ந்து:
ஆழமான வேர்களைத் தொடர்ந்து மேலோட்டமான வேருள்ன பயிர்களை விதைக்கலாம். இதற்கு பருத்தி, ஆமணக்கு, துவரம்பருப்பு உருளைக் கிழங்கு, பச்சைப் பயறுகள் சிறந்தவை.
கோடை உழவுக்குப் பிறகு:
அதிக ஆழமான உழவு தேவைப்படும் பயிர்களை, கோடை உழவு முடிந்த பின்னர் சாகுபடி செய்வது அவசியம்.
சற்று இறுகிய மண்ணிலும் வளரக் கூடிய தாவரங்களைப் பயிரிடலாம்.
உருளைக் கிழங்கு, முள்ளங்கி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கரும்பு, உளுந்து, பசுந்தாள் உரம் என சுழற்சி முறையில் வகைப்படுத்திக் கொள்ள வேண்டும்.