உணவு கழிவிலும் உரம் தயாரிக்கலாம்…

 |  First Published Oct 13, 2016, 5:08 AM IST



New University of Washington ஆராய்ச்சியாளர்கள் தற்போது உணவு கழிவினை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில் புதிய பயனளிக்கும் தகவல் உலக முழுவதும் உள்ளவர்களுக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் உணவு கழிவினை உரமாக்கும் திட்டமாகும். உணவு கழிவினை வைத்து உரமாக்குவதால் சுற்றுசூழல் பாதிப்பை பெருமளவில் நாம் தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதனை ஒவ்வொருவரும் மேற்கொண்டால் கண்டிப்பாக இயற்கையான உரம் நமக்கு கிடைக்கும் மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படவே ஏற்படாது. இந்த கழிவுகளை நாம் மண்ணில் மட்க செய்வதால் கீரின்ஹவுஸ் மீத்தேன் வாயு அளவை குறைக்க இது மிக பெரிய வழியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Latest Videos

வரும் 2016-ம் ஆண்டு முதல் இந்த புதிய முறையினை பயன்படுத்தி இயற்கை உர தயாரிப்பு மற்றும் பசுங்குடில் மீத்தேன் அளவை குறைக்க பெருமளவு வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இம்முறையினை அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. உணவு கழிவினை உரமாக்கும் திட்டத்தை மேற்கொண்டால் கண்டிப்பாக மீத்தேன் வெளியேற்றத்தினை குறைக்க உதவும் என்று பிரவுன் கூறினார்.

click me!