வெள்ளாடுகள்
தலைசேரி, சேலம் கருப்பு ரக வெள்ளாடுகள் லாபம் கொடுக்கக்கூடியதாகும். தலைச்சேரி ஆடுகளின் பெயர்காரணம் - இது கேரள மாநிலத்திலுள்ள தலைச்சேரியை பூர்வீகமாக்கொண்டதால் இந்த பெயர் பெற்றது.
இந்த ரக ஆடுகள் தேவைப்படுவோர் கேரள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெற முடியும். நம் தமிழிகத்தில் ஒரு சில கால்நடைப் பண்ணைகளில் இந்த ரக ஆடுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
இந்த தலைச்சேரி ரக ஆடுகளை பெற இந்த கால்நடைப் பண்ணைகளில் முன் பதிவு செய்து காத்திருக்க வேண்டும். உடனடியாக வேண்டுவோர் கேராளவிற்கு சென்று உடனே இந்த ரக ஆடுகளை வாங்கலாம்.
சேலம் கருப்பு ரகத்தை சார்ந்த ஆடுகளை தமிழகமெங்கும் எந்த பகுதிகளில் வளர்க்ககூடிய வகையைச் சார்ந்தது. சேலம் மாவட்டத்தில் மேச்சேரி, கொளத்தூர், மேட்டூர், வெப்பூர் ஆகிய ஊர்களில் இந்த ஆடுகள் விலைக்கு கிடைக்கும்.
ஆட்டுப்பண்ணைகள் வைக்க விரும்புபவர்கள் முதலில் அதற்கான முறையான பயிற்சி பெற வேண்டும். அதற்கு உங்களுக்கு அருகில் உள்ள கால்நடைமருத்துவ ஆராய்ச்சி நிலையங்களில் நடத்தப்படும் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சியில் கலந்துகொண்டு, அங்கே கிடைக்கும் பயிற்சியின் வாயிலாக நீங்கள் ஒரு சிறந்த வெள்ளாடு வளர்ப்பாளராக பரிமளிக்க முடியும்.