இந்த வகை கறவை மாடுகள் நம்மை லாபத்தில் மிதக்க வைக்கும்...

 
Published : Feb 15, 2018, 01:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
இந்த வகை கறவை மாடுகள் நம்மை லாபத்தில் மிதக்க வைக்கும்...

சுருக்கம்

This type of dairy cows can make us spoil the profits ...

1.. காங்கேயம்

தமிழ்நாட்டின் கோயமுத்தூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.

உழவிற்கும், போக்குவரத்திற்கும் ஏற்றதாகும். நல்ல கடுமையான சூழ்நிலையை தாங்குகிறது.

2.. ஜெர்சி

26 - 30 மாதம் முதல் ஈனுகிறது.

கறவை கால இடைவெளி : 13 - 14 மாதங்கள்

பால் உற்பத்தி - 5000 - 8000 கிலோ

ஜெர்சி இனம் ஒரு நாளுக்கு 20 லிட்டர் பால் கொடுக்கிறது. ஆனால் ஜெர்சி கலப்பினங்கள் ஒரு நாளுக்கு 8 - 10 லிட்டர் பால் கொடுக்கிறது.

இந்தியாவில், இவ்வினம், வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளில் நன்கு ஒத்து வாழ்கிறது.

3.. ஹோல்ஸ்டீன் ப்ரிசியன்

இவ்வினம் ஹாலந்து நாட்டைச் சார்ந்தது.

பால் உற்பத்தி 7200 - 9000 கிலோ

பால் உற்பத்தியைப் பொருத்த வரை, அயல் நாட்டு இனங்களில் இது சிறந்ததாகும். சராசரியாக ஒரு நாளுக்கு 25 லிட்டர் பால் கொடுக்கிறது. ஆனால் கலப்பினங்கள் 10-15 லிட்டர் பால் கொடுக்கின்றன.

டெல்டா மற்றும் கடலோர பகுதிகளுக்கு ஏற்றதாகும்.

3.. முர்ரா

ஹரியானா, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் அதிகம் காணப்படுகிறது.

பால் உற்பத்தி - 1560 கிலோ

சராசரியாக ஒரு நாளுக்கு 8 - 10 லிட்டர் பால் கொடுக்கிறது ஆனால் முர்ரா கலப்பினங்கள் 6 - 8 லிட்டர் பால் கொடுக்கின்றன.

கடலோரம் மற்றும் குளிர் பிரதேசங்களுக்கும் ஏற்றதாகும்

4.. சுர்த்தி

குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது.

பால் உற்பத்தி : 1700 - 2500 கிலோ

5.. ஜப்ராபதி

குஜராத் மாநில கத்தியவார் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது

பால் உற்பத்தி - 1800 - 2700 கிலோ

6..  நாக்பூரி

நாக்பூர், வர்தா, அகோலா, அமராவதி மற்றும் யோட்மால் (மஹாராஸ்டிரா)

பால் உற்பத்தி : 1030 - 1500 கிலோ

PREV
click me!

Recommended Stories

Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?
Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!