நவீன நீர்பாசன அமைப்பில் தற்போது இரண்டு முக்கிய முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
1.. தெளிப்பு நீர் பாசனம் மற்றும் 2.. சொட்டுநீர் பாசனம்
தெளிப்பு நீர் பாசனம்
துளையிடப் பட்ட நீளமான குழாயில் உள்ள முனையில் தெளிப்பான்களைப் பொருத்தி நீர் பாய்ச்சவேண்டும்.இந்த முறையில் நீரானது செடிகளுக்கு தெளிக்கப் படுகிறது. இந்த மாதிரி தெளிப்பான்களை தேவையான இடங்களில் பொருத்தி நீர் பாய்ச்சலாம்.நடு பைவட் முறை (center pivot system) என்பதும்தெளிப்பு நீர் பாசன முறையை சேர்ந்ததாகும்.
விவசாயத்தை விட்டு வெளியேறிவருபவர்களை மீண்டும் விவசாயத்துக்கு அழைத்துவரும் வகையில் தெளிப்புநீர் பாசனம்...
முழு மானியத்தில் நுண்ணீர் பாசனங்களான சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனத்திட்டத்தை அறிமுகம் செய்தது. நூண்ணீர் பாசனமான தெளிப்புநீர் பாசனத்தில் ஈடுபடலாம்.
தெளிப்பு நீர் பாசனம் மூலம் சம்பங்கி, ரோஜா, மல்லிகை, கத்தரி, வெண்டை உள்ளிட்ட தோட்டப்பயிர்களை பயிரிடலாம்.
இதில் தண்ணீர் மிச்சப்படுத்தப்படுவதுடன், நல்ல மகசூல் கிடைக்கும். நல்ல விலையும் கிடைக்கும்.
விவசாயத்துக்கு போதிய அளவு தண்ணீர் இல்லாததால், நுண்ணீர் பாசனம் முறையை பயன்படுத்தி விவசாயத்துறையில் வளர்ச்சியை காணலாம்.
பூக்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட தோட்டப் பயிர்களைத் தேர்ந்தெடுத்து விளைநிலங்களுக்கு தேவையான தெளிப்பு நீர் பாசன வசதியை ஏற்படுத்தலாம்.
வாய்கால் பாசனத்தின் மூலம் 1 ஏக்கருக்கு பாய்ச்சப்படும் நீரைக் கொண்டு, தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் 6 ஏக்கர் வரை பாய்ச்ச முடியும். இதனால் தண்ணீர் சேமிப்பு, மின்சாரம் சேமிப்பு, பணம் சேமிப்பு ஆகியன சாத்தியமாகும்.
தெளிப்பு நீர்ப் பாசனத்தால் பயிரில் ஏற்படும் விளைவுகள்நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் பாசன நீர் 16 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரை சேமிக்கப்படுகிறது மட்டுமல்லாது 3-5 சதவிகிதம் உயர் விளைச்சலும் கிடைக்கிறது.