நிலத்தில் நுண்ணுயிர் பெருக உழவு அற்ற உயிர் மூடக்கு முறை பயன்படும்.
நீளம் சிறிது நல்ல நிலயில் இருந்தால் கொம்போஸ்ட் மற்றும் இல்லை தழைகளை பயன்படுத்தவும்.
மண் இறுக்கம் இல்லாமல் பொல பொல என்று 12 இன்ச் வரை கூறிய குச்சி உள் நுழயும்.
நீளம் இருக்கமாக இருந்தால் உயர்ந்த படுகைகள் உண்டாக்கி இந்த நிலத்தை சரி செய்யலாம்.
இந்த நிலத்தில் தீவன பயிர்கள் விதைகளை விதைக்க வேண்டும்.
பயிர் நன்றாக வளர்ந்த பின்பு அதனை தறையோடு வெட்டி நிலத்தின் மேல் பரப்பி விடவேண்டும்.
செடிகளை சிறிய குழி தோண்டி பயிரிடலாம். அந்த செடிகளை சுற்றி புல்லை பரப்ப வேண்டும்.
இப்போது தொடர்ந்து உயிர் சூழலுக்கு உணவு கொடுக்க வேண்டும்.
தொடர்ந்து கொம்போஸ்ட் இட்டால் நுண்ணுயிர்களுக்கு நல்ல உணவாக இருக்கும். இதன் மூலம் ரசாயன உறங்கள் பூச்சி கொள்ளிகளை தவிர்க்கலாம்.
மூடக்கு நிலத்தை முற்றிலும் மூடுவதோடு களைகள் வளறாமல், நிலம் இருக்கமா ஆகாமல் நுண்ணுயிர் பெருக மிகவும் அவசியம் ஆகிறது.
மூடக்கு மழை நீர் நிலத்தில் நன்றாக உறிஞ்ச பட உதவுகிறது, மழை நீர் மண்ணை அரிக்காமல் காப்பாற்றுகிறது.
இயற்கை மூடக்கு நிலத்தில் மண் புழுக்கள் பெருக உதவுகிறது. மண் புழுக்கள் அங்கக பொருட்கள் நிலம் முழுவதும் பரவ உதவுகிறது. மேல் இருந்து கீழே அங்கக பொருட்கள் மண் புழுக்கள் மூலம் எடுத்து செல்ல படுகிறது.
வேர் பகுதியில் உள்ள பாக்டீரியா இந்த அங்கக பொருட்களை பயன்படுத்துகிறது. இந்த மூடக்கில் வாழும் பூஞ்சை வகைகள் நோய் உண்டாகும் நுண்ணுயிர் வளறாமல் பாது காக்கிறது.
மக்க கூடிய மூடக்கில் டிரைக்கோடர்மா விரிடி என்னும் நன்மை பயக்கும் பூஞ்சை அதிகமாக உள்ளது. இது தீமை தரும் நூநூயிர்களிய அழிக்கிறது. நிலத்தில் நோய் உண்டாகும் நுண்ணுயிர்களும் உள்ளது.
ஆனால் மூடக்கு இட்டு நுண்ணுயிர்களுக்கு உணவு உள்ள நிலத்தில் உணவு பின்னல் நோய்கள் உண்டாக்கும் நுண்ணுயிர்கள் அதிகமாக பெருகாமல் பாதுகாக்கிறது.