மனிதனின் நாகரிக வளர்ச்சியாலும், ஜெர்சி இன பசுக்கள் வரவாலும் நாட்டு மாட்டின் இனங்கள் படிப்படியாக குறையத் தொடங்கியது.
அரசே ஜெர்சி பசுக்களை மேலை நாடுகளில் இருந்து பால் தேவைக்காக இறக்குமதி செய்யத் தொடங்கியது.
இதனால் நாட்டு மாட்டு இனங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இன்று 35-க்கும் குறைவான எண்ணிக்கையில் காணப்படுகிறது.
எஞ்சியுள்ள காளைகளின் விபரங்கள் மாநில வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
1.. தமிழ்நாடு – பர்கூர், காங்கேயம், புங்கனூர், உம்பளச்சேரி, மயிலை
2. கர்நாடகா – அமிர்த மகால், ஹல்லிகர், கிருஷ்ணா வாலி, மல்நாட் ஹிடா
3. ஆந்திரா – ஓங்கோல், புங்கனூர்
4. கேரளா – வச்சூர்
5. மகாராஷ்டிரா – தாங்கி, தியோனி, கவொலாவோ, ஹில்லார், நிமாரி, சிவப்பு காந்தாரி
6. குஜராத்- கிர், சிவப்பு காந்தாரி
7. ராஜஸ்தான் – காங்ரெஜ், மால்வி, நகோரி, ரதி, தார்ப்பார்க்கர்
8. ஹரியானா – ஹரியானா
9. பஞ்சாப்- சிவப்பு சிந்தி, சாஹிவால்.
10.உத்தரப்பிரதேசம் – கேன்கதா, கேரிகார்க், மேவாதி, பொன்வார், கங்காத்ரி
11. பீகார் – பச்சூர், கங்காத்ரி
12. மேற்கு வங்காளம், சிக்கிம் – சிறி
13. நாகாலாந்து- தோதோ