பருத்தியைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இவ்வளவு முறைகள் இருக்கு…

 |  First Published Apr 7, 2017, 12:17 PM IST
There are so many methods to control pests attacking paruttiyaitc



அ. கைவினை முறைகள்:

1.. விளக்கு பொறி வைத்தல்

Tap to resize

Latest Videos

2.. இனக்கவர்ச்சிப் பொறி வைத்தல்

3.. கருநீலத்துணி விரித்தல்

4.. முட்டை மற்றும் புழுக்கள் துணியின் அடியில் தங்குவதால் அதை சேகரித்து அழிக்கலாம்.

5.. மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி வைத்தல்

6.. “டி’ வடிவ குச்சியை நடுதல். இந்த குச்சியில் பறவைகள் அமர்ந்து புழுக்களை கண்காணித்து அதை உண்டுவிடும்.

7.. பருத்தியை தாக்கும் பூச்சிகளின் முட்டை, புழு மற்றும் கூட்டுப் புழுக்களை சேகரித்து அழித்தல். பூச்சி மற்றும் நோய் தாக்கப்பட்ட காய்கள், சப்பைகள், பூக்கள் மற்றும் இதர உதிர்ந்த பொருட்களை அகற்றி அழித்துவிடுதல்

ஆ. உயிரியல் முறைகள்:

1.. காய்ப்புழுவை கட்டுப்படுத்த 200மிலி என்.பி.வி. வைரஸ்/ஏக் தெளித்தல்.

2.. தூரிசைடு ஏக்கருக்கு 300 கிராம் தெளித்தல்.

இ. உழவியல் முறைகள்:

1.. கோடையில் உழுதல்  – பூச்சிகளின் முட்டை மற்றும் புழுக்கள் வெளிக் கொணரப்பட்டு அழியும்.

2.. அமில விதை நேர்த்தி செய்த விதைகளை பயன்படுத்துதல்.

3.. பூஞ்சாண உயிர்கொல்லி டிரைக்கோடெர்மா விதைநேர்த்தி செய்தல்.

4.. உயிர் உரமான அசோஸ்பைரில்லம் கொண்டு விதைநேர்த்தி செய்தல்.

5.. வேப்பம் புண்ணாக்கு இடுதல்

6.. பொறிப்பயிர்கள் முறையே சூரியகாந்தி, சாமந்தி பயிரிடுதல்.

7.. உயர் விளைச்சல் மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை கொண்ட ரகங்களை பயிரிடுதல்.

8.. ஊடுபயிராக உளுந்து மற்றும் பாசிப்பயிர் பயிரிடுதல்.

9.. தரம் வாய்ந்த மற்றும் சான்று பெற்ற விதைகளை விதைத்தல்.

10.. கிராமம் முழுவதும் ஒரே ரகமான விதைகளை விதைத்தல்.

11.. தோட்டக்கால் சால் முறையில் பருத்தி விதையை விதைத்தல்.

12.. வரப்பு பயிர்கள் மக்காச்சோளம், சோளம் மற்றும் ஆமணக்கு பயிரிடுதல்.

13.. பருத்தி மறுதாம்பு பயிர் விடுதலை தவிர்த்தல்.

ஈ. ரசாயன முறைகள்:

1.. பருத்தி வயலில் பயிரைத் தாக்கும் பல பூச்சிகளை எண்டோசல்பான் 250மிலி மற்றும் பாசலோன் பூச்சிக்கொல்லி தெளித்து கட்டுப்படுத்தலாம்.

2.. வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி அசாடிராக்டின் ஏக்கருக்கு 200மிலி தெளித்தல்.

3.. கார்போபியூரான் குருணை ஏக்கருக்கு 12 கிலோ இடுதல்.

பூச்சிக்கொல்லிக்கான டிப்ஸ்:

1.. பூச்சிக்கொல்லிகளை மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும். பகல் நேரங்களில் தெளித்தால் சூரிய ஒளியில் பூச்சிக்கொல்லிகள் ஆவியாகிவிடுவதோடு மட்டுமல்லாமல் புழு மற்றும் பூச்சிகள் இலைக்கு அடியில் போய் மறைந்து கொள்ளும். மேலும் மாலை நேரங்களில் புழு மற்றும் பூச்சிகள் வெளியில் வரும். அப்போது தெளித்தால் உடனே அழிந்துவிடும்.

2.. ஒரே பூச்சிக்கொல்லி திரும்பத்திரும்ப பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் பயன்படுத்திய பூச்சிக்கொல்லிக்கு கட்டுப்படவில்லை என்றால் மற்றொன்றை பயன்படுத்த வேண்டும்.

click me!