தேனீ வளர்ப்பில் ஐந்து வகை இருக்கு. அவை என்னென்னனு பார்ப்போம்…

 |  First Published May 2, 2017, 1:12 PM IST
There are five types of bee breeding. Lets see what they are



தேனீக்களை பிடித்து அதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கூடுகளில் வளர்த்து, அதனைப் பராமரித்து, தேன் மகசூல் எடுக்கும் தொழிலுக்குப் பெயர் தேனீ வளர்ப்பு.

ஏபிஸ் எனும் லத்தீன் வார்த்தைக்கு தேனீ என்று அர்த்தம். அதனால் தான் தேனீ வளர்ப்பை Apiculture எனவும், தேனீ வளர்ப்பாளரை Apiarist எனவும் அழைக்கின்றனர்.

Tap to resize

Latest Videos

எகிப்து, மெசபடோமியா, கிரேக்கம், இஸ்ரேல், சீனா, ரோமாபுரி போன்ற பண்டைய கால நாகரிக நாடுகளில் தேனீ வளர்ப்பு, தேனின் பயன்பாடு, இரும்பு காலத்திற்கும், வெங்கல காலத்திற்கும் முன்னதாகவே இருந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் கிடைத்துள்ளன.

மர உருளைத் துளைகளிலும், மரப்பெட்டிகளிலும், மண் பாண்டங்களிலும், வைக்கோலால பின்னப்பட்ட கூடைகளிலும் தேனீ கூட்டம் வளர்க்கப்பட்டன.

தேனீக்களில் சுமார் 20000-க்கும் மேற்பட்ட இனங்கள் இருக்கின்றன. இந்தியாவில் இயற்கையாக ஐந்து வகை தேனீக்கள் உள்ளன. இத்தாலிய இன தேனீக்களும் இந்தியாவில் வளர்க்கப்படுகின்றது.

1.. பாறைத் தேனீ

பாறைத் தேனீ என அழைக்கபப்டும் மலைத் தேனீ. தேனீக்களில் இவை மிகவும் பெரியது. மலைப் பாறைகளிலும், மிக உயரமான மரங்களிலும் பெரிய அளவில் கூடு கட்டி வாழும் தன்மை உடையது. இந்த மலைத்தேனீக்கு எதிரிகளால் சிறிய இடைஞ்சல் ஏற்பட்டாலும் இடைஞ்சலுக்குக் காரணமான எதிரியை உடனே சூழ்ந்து கொட்டும் தன்மையுடையது.

இந்த தேனீக்களுக்கு சிறிதளவு நச்சுத் தன்மையுண்டு. இந்த வகை மலைத் தேனீக்கள் அதிக அளவு தேனை சேகரிக்கும் குணமுடையது. ஆனால் மலைத்தேன் பெட்டிகளில் வளர்ப்பதற்கான இனமல்ல.

2.. கொம்புத்தேனீ

கொம்புத்தேனீ என அழைக்கப்படும் இவ்வகை தேனீக்களின் உருவம் சிறியது. சிறிய மரக் கிளைகளிலும், புதர்களிலும் கூடு கட்டி வாழும் இந்த வகை தேனீக்களும் கொட்டும் தன்மை உடையது. இது குறைவான அளவே தேனை சேகரிக்கும். ஆகவே பெட்டிகளில் வளர்ப்பதற்கு கொம்புத் தேனீக்களும் ஏற்றவை அல்ல.

3.. இந்தியத் தேனீ

இந்தியத் தேனீ அல்லது அடுக்கு தேனீ என அழைக்கப்படும் இந்த தேனீ இனம் மலைத் தேனீக்களை விட அளவில் சிறியதாகவும், கொம்புத் தேனீக்களை விட அளவில் பெரியதாகவும் இருக்கும். அடுக்கடுக்காய் தேடனைகட்டி வாழுகின்ற குணத்தை உடையது. இதுவும் கொட்டும் தன்மையை உடையதுதான். ஆனால் இந்த இனமானது தேன் நன்றாக சேகரிக்கும். பெட்டிகளில் வளர்க்க ஏற்றது.

4.. கொசுத் தேனீ

கொசுத் தேனீ என அழைக்கப்படும் இந்த இன தேனீக்கள் Dammer Bee எனவும் அழைக்கப்படும். கொசுக்களை விட சற்று பெரியது. மிகவும் மெல்லிய உடலமைப்பை உடையது. வாயினால் கடிக்கும் தன்மை உடையது. சிறிதளவு தேன்தான் கிடைக்கும். ஆனால் மருத்துவ குணமுடையது. வீட்டு இடுக்குகள், கல் இடுக்குகள், மர பொந்துக்களில் மரப்பிசின்களைக் கொண்டு கூடு கட்டி வாழும் இயல்பை உடையது. மண் பானைகளில் இவைகளை வளர்க்கலாம்.

5.. இத்தாலிய தேனி

இத்தாலிய வகை தேனீக்கள் ஐரோப்பாவின் இத்தாலியும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும் பெருமளவு வளர்க்கப்படும்

இனம். இதன் உடல் அமைப்பு சற்று பெரியது. இதன் தேன் சேகரிக்கும் திறனும் அதிகம். இதனை பெரிய தேனீ வளர்ப்பு பண்ணைகளில் பிரியத்துடன் வளர்க்கின்றனர்.

click me!