பகுதியளவு தீவிர வளர்ப்பு முறையில் கோழிகளை வளர்ப்பது எப்படி? ஒரு அலசல்...

 |  First Published Nov 28, 2017, 12:40 PM IST
The method of cultivating chicken in partial intensive system



பகுதியளவு தீவிர முறை வளர்ப்பு

மேலே கூறியது போல கோழிகள் பாதி நேரம் கொட்டகைகளிலும், பாதி நேரம் மேய்ச்சல் தரைகளிலும் வளர்க்கப்படுகின்றன. அதாவது இரவு நேரங்களும், தேவைக்கேற்பவும், கொட்டகைகளில் அடைத்து விட்டு மீதி நேரம் முழுவதும் திறந்த வெளிகளில் கோழிகள் மேய அனுமதிக்கப்படுகின்றன. 

கொட்டகைகளின் தரை கடினமான தரையாகவும், மேய்ச்சல் நிலங்கள் திறந்த வெளிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இம்முறையின் மூலம் வெற்றிகரமாக கோழி வளர்ப்பது திறந்த வெளிகளை நோய்க்கிருமிகளால் அசுத்தமடையாமல் பராமரிப்பதைப் பொறுத்தது. திறந்த வெளி நிலங்கள் சுழற்சி முறையில் உபயோகப்படுத்தலாம். 

ஒரு ஹெக்டேர் நிலத்தில் இம்முறையில் 750 கோழிகளை வளர்க்கலாம். இம்முறை பொதுவாக வாத்துகள் வளர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. கோழிகளுக்குத் தீவனமும், தண்ணீரும் கொட்டகைகளில் அளிக்கப்படுகிறது.

இம்முறையில் கோழி வளர்ப்பதில் இருக்கும் நன்மைகள்

திறந்த வெளி வீடமைப்புடன் ஒப்பிடும்போது இம்முறையில் நிலங்களை நன்றாக உபயோகப்படுத்தலாம்.

பல்வேறு விதமான சுற்றுப்புற சூழ்நிலைகளிலிருந்து கோழிகளைப் பாதுகாக்கலாம்.

அறிவியல் முறையில் கோழிகளை வளர்ப்பது ஒரளவுக்கு இம்முறையில் சாத்தியம்.

இம்முறையில் கோழி வளர்ப்பதில் இருக்கும் தீமைகள்

வேலி போடுவதற்கு அதிக செலவாகும்

குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கொட்டகையினை சுத்தம் செய்து ஆழ்கூளத்தை அகற்ற வேண்டும்.

click me!