கிராமங்களில் விவசாயிகளிடையே இன்றும் சில மூடநம்பிக்கைகள் உள்ளன. அதுவும் கோழி வளர்ப்பில் விவரம் தெரியாமல் அவர்களாகவே முடிவு செய்து கொள்கின்றனர்.
நள்ளிரவில் கூவும் சேவல்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது.
undefined
தோல் முட்டையிடும் கோழிகள் வீட்டுக்கு ஆகாது.
வெள்ளிக்கிழமை அன்று முதன் முதலாக முட்டையிடும் கோழிகள் வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்பதுபோன்ற நம்பிக்கைகள் இன்றும் கிராமப்புறங்களில் உலா வருகின்றன.
சில கோழிகள் தோல் முட்டை இடும். இப்படிப்பட்ட கோழிகள் வீட்டுக்கு ஆகாது என்று விற்றுவிடுவார்கள். அல்லது அறுத்து விடுவார்கள்.
இதே போல நள்ளிரவில் கூவும் சேவல்களை வீட்டில் வைத்திருப்பதில்லை. இவை தவறான எண்ணத்தில் ஏற்பட்ட பழக்கவழக்கங்கள்.
முட்டையின் ஓடு கால்சியம் என்ற சுண்ணாம்புச் சத்தினால் ஆனது. கால்சியம் குறைபாடு தீவனத்தில் இருந்தால் கோழிகள் தோல் முட்டை இடும்.
தோல் முட்டை இடுவதால் எளிதில் உடைந்து விடுகின்றன. இதனால் முட்டை உற்பத்தி பாதிக்கும். மேலும் உடைந்த முட்டைகளை சில கோழிகள் கொத்தி தின்ன ஆரம்பிக்கும். நாளடைவில் அந்த ருசி பழக்கப் பட்டவுடன் நாள்தோறும் அக்கோழிகள் நல்ல முட்டைகளை உடைத்து சாப்பிடும். இதனால் முட்டையில் கிடைக்கும் லாபம் குறையும். இதற்குத் தீர்வாகத்தான் தோல் முட்டையிடும் கோழிகளை அறுத்துவிடுவார்கள். தீவனத்தில் சுண்ணாம்புச்சத்து குறையும் போதோ அல்லது பற்றாக் குறை ஏற்படும்போதோ கோழிகள் தோல் முட்டையிடுவது இயற்கை. சுண்ணாம்புச்சத்தினை தகுந்த அளவில் தீவனத்தில் சேர்த்துக் கொடுப்பதால் இக்குறையை தீர்க்கலாம்.
நாட்டுக் கோழிகள் வளர்ப்பில் கோழிகள் நீண்டநாள் அடைகாப்பதால் முட்டையிடவில்லையே என்று கருதி அதனை தெளியவைக்க முயற்சி செய்வார்கள். அம்முயற்சிகளில் ஒன்று கோழிகளின் மூக்கில் இறகினை குத்தி விடுவது.
சில விவசாயிகள் அடை தெளியவில்லை என்றால் அப்படிப்பட்ட கோழிகளை நீரில் அமிழ்த்துவார்கள். இப்படியெல்லாம் அடைகாக்கும் கோழிகளை கொடுமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. மூக்கில் இறகைத் திணிப்பதால் அடைகாக்கும் குணத்தை மாற்றமுடியாது. எனவே மூடநம்பிக்கைகளை ஒழித்து நாட்டுக்கோழிகளைப் பேணிக் காப்பதால் நடமாடும் பணவங்கியாக உள்ள நாட்டுக்கோழிகளின் மூலம் அதிக லாபம் பெறலாம்.