நாட்டுக் கோழியின் சில ரகங்கள்; அவற்றின் பிளஸ் பாயிண்ட்ஸ்…

 |  First Published Apr 3, 2017, 12:04 PM IST
Some varieties of chicken country Plus Points of



1.. ஏசெல் கலப்பு:

“ஏசெல்” என்பதன் அர்த்தம் உண்மை அல்லது தூய்மை என்பதே. இவ்வகை கோழிகள், சக்திவாய்ந்த, உறுதியான, திடமான வெளித் தோற்றம், கம்பீரமான நடை, உறுதியான சண்டை போடும் திறன் கொண்டவை. 

Latest Videos

undefined

இதன் சண்டை போடும் திறனைக் கொண்டே “ஏசெல்” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றம் ஆந்திரப் பிரதேச மாநிலம் எனத் தெரிகிறது.  இவ்வகை மிகவும் அரிதாகக் இருந்தாலும் சேவல் சண்டைக் காட்சி நடத்துபவர்களிடம் காணப்படுகிறது.

பிளஸ் பாயிண்ட்ஸ்:

1.. ஏசெல் இனம், திடகாத்திரமான, மதிப்பான பார்வை கொண்ட இனமாகும்.

2.. சேவல் எடை 3-4 கிலோவாகவும், கோழி எடை 2-3 கிலோவாகவும் உள்ளது.

3.. 196 நாட்களில் பருவம் அடைகிறது.

4.. வருட முட்டை உற்பத்தி (எண்ணிக்கை) 92

5.. 40-வது வாரத்தில் முட்டை எடை (கிராம்) 50

2.. கடகநாத் கலப்பு:

பொதுவாக “கலாமாசி” என்று அழைக்கிறார்கள்.  கருப்பு சதையுடைய பறவை என்பது இதன் அர்த்தம்.  மத்திய பிரதேச மாநில தாபுவா மற்றும் தார் மாவட்டமும் அருகில் உள்ள ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில மாவட்டமும், அதாவது 800 சதுர மைல் பரப்பு இவ்வகை இனத்தின் தோற்றம் ஆகும்.

பழங்குடியினர், ஆதிவாசிகள், ஏழை கிராம மக்கள் ஆகியோர் இவ்வகைக்
கோழிகளை வளர்க்கின்றனர்.

சேவல் பலிக்காக பயன்படுகிறது.  அதாவது தீபாளிக்குப் பின் கடவுளுக்கு பலி கொடுக்கப்படுகிறது. கோழிக் குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன், பிற்பகுதியில்
கருப்பு கோடுகளுடன் காணப்படுகிறது.

பிளஸ் பாயிண்ட்ஸ்:

1.. கறி கருப்பாக, பார்வைக்கு ஏற்றதாக இல்லாமல் இருந்தாலும், சுவையாகவும்,
மருத்துவ குணங்கள் நிறைந்தும் காணப்படுகிறது.

2.. பழங்குடியினர், கோழி இரத்தத்தையும், கறியையும், கடும் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்.

3.. கறி மற்றும் முட்டையில் நல்ல புரதச் சத்தும் (25.47% கறியில்) இரும்புச் சத்தும் உள்ளது.

4.. உடல் எடை  40 வாரத்தில் 920 கிராம்

5.. பருவ வயது  – 180 நாட்கள்

6.. வருட முட்டை உற்பத்தி எண்ணிக்கை – 105

7.. முட்டை எடை 40 வாரத்தில் (கிராம்) – 49

8.. கருவுற்றல் –  55%

9.. கோழிக்குஞ்சு பொரிக்கும் திறன்  – 52 %

3.. ஹிட்கரி (நேக்கட் நெக் கலப்பு)

நீலமான உருண்டை வடிவ கழுத்துடைய இனமாகும்.  பெயரில் உள்ளது போல்,
பறவைகளின் கழுத்து வெறுமையாக உள்ளது.  அல்லது, கழுத்தின் முற்பகுதியில் கொத்தாக சிறகுகள் உள்ளன.

பருவ நிலையை அடையும் பொழுது, சேவலின் தோல் சிவப்பு நிறத்திற்கு
மாறிவிடுகிறது. கேரளாவின், திருவனந்தபுரப் பகுதி இவ்வகை இனத்தின் தோற்றம் ஆகும்.

பிளஸ் பாயிண்ட்ஸ்:

1.. 20 வாரத்தில் உடல் எடை 1005 கிராம்

2.. பருவ வயது -  200 நாட்கள்

3.. 40 வாரத்தில் முட்டை எடை – 54 கிராம்

4.. கருவுற்றல் – 66%

5.. கோழிக்குஞ்சு பொறிக்கும் திறன் – 71%

4.. யு.பி.-கரி (பிரிசில் கலப்பு)

துப்புரவு குணமுடைய, உள்நாட்டு தோற்றமுடைய, நமது சுழலுக்கு ஏற்ற, நோய்
எதிர்ப்பு திறன் கொண்ட, நல்ல வளர்ச்சியும், உற்பத்தி திறனும் கொண்ட
இனமாகும்.

வீட்டிலியே வளர்ப்பதற்கு ஏற்ற இனமாகும். வெவ்வேறு வேளாண் காலநிலைக்கு ஏற்ற 4 இரகங்கள் உள்ளன. 

பிளஸ் பாயிண்ட்ஸ்:

1.. பருவ வயது  : 170 – 180 நாட்கள்

2.. வருட முட்டை உற்பத்தி 165-180 முட்டைகள்

3.. முட்டை எடை – 52-55 கிராம்

4.. முட்டை நிறம் : காப்பி நிறம்

5.. முட்டை தரம் :  உயர்ந்த தரம்

6.. உயிர்த்திறன் : 95% மேல்

7.. சுறுசுறுப்பானது, செடிகளை உண்ணும் குணமுடையது

click me!