சிவப்புக் கீரை வளர்ப்பில் சிறப்பான இலாம் உண்டு…

 |  First Published Dec 21, 2016, 12:27 PM IST



கன்னியாகுமரி மாவட்டம் துவரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஒரு ஏக்கரில் மீன் வளர்ப்பு, ஒரு ஏக்கரில் மரவள்ளி சாகுபடி, 25 சென்டில் வாழை இவைகளோடு 4 சென்டில் சிவப்புக் கீரையையும் சாகுபடி செய்து வருகிறார்.

4 சென்டில் மாதம் ரூ.4000 வரை வருமானம் கிடைப்பதாகக் கூறும் இவர் கடைபிடிக்கும் சாகுபடி நுட்பங்கள்:

  • வண்டல்மண் ஏற்றது. கீரைகளுக்கு பட்டம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. சாகுபடி செய்வார்கள்.
  • இவர் நாற்று பாவி சரியான இடைவெளியில் நடவுசெய்து நல்ல விளைச்சல் பெற்றுள்ளார்.
  • 20 சதுரடி பரப்பில் மண்ணை நன்றாகக் கிளறி சாம்பல் மற்றும் தொழு உரம் ஆகியவற்றில் தலா 20 கிலோ அளவுக்கு பரப்ப வேண்டும்.
  • விதைகளைத் தூவி விதைத்து பூவாளியால் நீர் தெளித்து வரவேண்டும்.
  • 25ம் நாளுக்கு மேல் நாற்றுகளை எடுத்து நடவு செய்யலாம்.
  • 4 சென்ட் நிலத்தை நன்றாக கிளறி, 50 கிலோ சாம்பல், 100 கிலோ தொழு உரம், 1 கிலோ பொடித்த கடலைப் பிண்ணாக்கு, 2 கிலோ பொடித்த வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைப் பரப்பி கிளறிவிட வேண்டும்.
  • 12 அடி நீளம், இரண்டரை அடி அகலத்திற்கு பாத்திகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.
  • பாத்திக்கும் இடையில் முக்கால் அடி இடைவெளி வாய்க்கால் இருக்க வேண்டும்.
  • வரிசை, செடிக்குச் செடி 7 அங்குலம் இடைவெளி விட்டு நாற்றுக்களை பாத்தியில் நடவு செய்ய வேண்டும்.
  • அவசியம் என்பதால் செழும்பாக தண்ணீர் கட்டவேண்டும்.
  • செய்த 7ம் நாள் 250 மில்லி மீன்அமிலக்கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • கழுவிய தண்ணீரை ஒருநாள் அப்படியே வைத்திருந்து மறுநாள் சரிபங்கு தண்ணீரில் கலந்து செடிகள் மீது வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
  • செய்த 15ம் நாள் மூலிகை பூச்சிவிரட்டி தெளித்தால் பூச்சிகள் அண்டாது.
  • 10,000 கட்டு கீரை கிடைக்கும். கட்டு 6 ரூபாய்க்கு விற்பனையானாலும் செலவு போக ரூ.40,000 வருமானம் கிடைக்கும்.

Tap to resize

Latest Videos

 

click me!