பஞ்சகாவ்யா அப்படி என்ன நன்மையை பயிர்களுக்கு தருகிறது? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...

 |  First Published May 17, 2018, 1:35 PM IST
Panchagavya What kind of benefits does it give to crops? Read this for your friend ...



பஞ்சகாவ்யா 

பஞ்சகாவ்யா பயிர்களுக்கு நல்ல வளர்ச்சி கொடுப்பது மட்டும் இல்லாமல் பூச்சிகளில் இருந்து காப்பற்றவும் செய்கிறது. இதை எப்படி உங்கள் வீட்டிலேயே செய்வது?

தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை;

முதலில், கோசானம் 7 kg, கோநெய் 1 kg இரண்டையும் ஒரு பிளாஸ்டிக் பாத்ரம், concrete டான்க் அல்லது மண் பானையில் கலக்கவும். இந்த கரைசலை நன்றாக காலையிலும், மாலையிலும் கலக்கவும். 

மூன்று நாட்கள் ஆன பின், கோமூத்திரம் 10 லிட்டர், நீர் 10 லிட்டர் சேர்க்கவும். இந்த கரைசலை 15 நாட்கள் வெய்திருக்கவும். நன்றாக காலையிலும், மாலையிலும் கலக்கவும். 

15 நாட்கள் ஆன பின், பசும்பால் 3 லிட்டர், பசும்தயிர் 2 லிட்டர், இளநீர் 3 லிட்டர், வெல்லம் 3 கிலோ, பழுத்த பூவன் பழம் ஒரு டஜன் போட்டு கலக்கவும்.

இந்த கரைசல், 30 நாட்களுக்கு பின்னர் பஞ்சகாவ்யா ரெடி ஆகி விடும. ஆகா, பஞ்சகாவ்யா செய்ய, கிட்ட தட்ட ஒரு மாதம் வேண்டும்.

டிப்ஸ்:

– தினமும், காலை, மாலை இரு முறை கரைசலை நன்றாக கலக்க வேண்டும்

– அகண்ட வாய் உள்ள பாத்ரம் இருந்தால் நல்லது

– பாத்தரத்தை நிழலில் வையுங்கள்.

– பத்திரத்தின் வாயை ஒரு கொசு வலை வைத்து கட்டவும். கொசு, மற்ற பூசிகள் உள்ளே போகாமல் இருக்க உதவும்.

click me!