எவ்வளவு காய்கறிகள் இருந்தாலும் கொடித்தக்காளி தர லாபம் வேற லெவல்…

 |  First Published Mar 17, 2017, 11:23 AM IST
Non kotittakkali grade level from vegetables much else



பெரும்பாலானோர் காய்கறிகள் பயிர் செய்தால் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். ஆனால், கொடித்தக்காளி மாதிரி எந்தப் பயிரிலேயும் லாபத்தை பார்க்க முடியாது.

கொடித் தக்காளி பயிர் செய்ய ஏற்ற இரகம் US 3140 ஹைபிரிட் தான். காரணம் என்னன்னா, அறுவடை பண்ணின பிறகு 15 நாள் ஆனாக்கூட காய் கெடாமத் தாக்க்ப் பிடிக்கும்.

Tap to resize

Latest Videos

ஹைபிரிட் தக்காளிகளுக்கும் நாட்டுத் தக்காளிக்கும் இது தான் பெரிய வித்தியாசம்.

நிறைய விவசாயிங்க தக்காளி பயிர் செய்ய பயப்படுறாங்க. தக்காளி விலை அடிக்கடி ஏறும், இறங்கும். சில நேரங்களில் கிலோ தக்காளி 2 ரூபாய்க்கு கூட கேட்க ஆள் இருக்காது. 5 ரூபாய்க்குக் கீழே வித்தாலே கையப்புடிச்சுரும். விலை ஏறும்போது கிலோ 40 ரூபாய்க்கு மேலேயும் விற்கும்.

ஹைபிரிட் தக்காளில பல ரகங்கள் இருக்கு. ஒண்ணு புளிப்புத் தக்காளி, நம்ம நாட்டுத் தக்காளி மாதிரியே புளிப்பு அதிகமானதா இருக்கும். இதைத்தான் சமையலுக்கு விரும்பி வாங்குவாங்க.

இன்னொண்ணு, பெங்களூர் தக்காளி. இது அப்படியே சாப்பிடறதற்கும், ஜூஸ் போடுறதற்கும் நல்லா இருக்கும்.

வளருகிற தன்மையைப் பொறுத்து தக்காளியில் 3 வகைகள் இருக்குது. முதல் வகை, செடித்தக்காளி. இது 3 அடிக்கு மேல வளராது, படர்ந்து அகலமா கிளையடிச்சு வளரும். இதற்கு செடிக்குச் செடி அதிக இடைவெளி தேவை.

இரண்டாவது வகை, கொடித் தக்காளி இது அதிகமாகப் படராது. மாறாக உயரமா 6-7 அடிக்கு கூட வளரும். பெரும்பாலும் பசுமை குடில்களில் தான் இதைப்பயிர் செய்யுறாங்க. மிக அதிக அளவில் மகசூல் தரக்கூடியது. இஸ்ரேல் தேசத்துல முழுக்க முழுக்க இதைத்தான் பயிர் செய்யுறாங்க.

மூன்றாவது ரகம் மேலே சொன்ன ரெண்டு ரகத்துக்கும் மத்தியில் ஒரு இரகம் இருக்கு அது தான் நடுத்தரக் கொடித்தக்காளி. உயரம் 4 அடிக்கு மேலே வளரும். ஓரளவு படரவும் எய்யும். இந்த ரகத்தைத் தான் நாங்க பயிர் செய்யிறோம்.

எப்படிப்பயிர் செய்வது:

வண்டல் கலந்த தண்ணீர் தேங்காத மண் பயில் செய்கிறதற்கு ஏத்த நிலம். 50 சென்ட் நிலத்தில இந்த கொடித் தக்காளிப் பயிர் செய்யலாம்.

முதல் உழவுக்கு பிறகு 5 ட்ராக்டர் லோடு சாணி எரு அடிக்கனும். விவசாயத் துறையிலிருந்து கிடைச்ச அசோஸ்பைரில்லம் 2 கிலோ, பாஸ்போபேக்டீரியா 2 கிலோவையும் கூட போடலாம்.

மறுபடி 2 உழவு ஓட்டி 2 அடி இடைவெளியிலே பார் போடனும். இங்கெல்லாம் ஊருக்கு ஊர் காய்கறி நாற்று நர்சரிகள் இருக்கும். அவங்களே அந்தந்த சீசனுக்கு ஏற்ற மாதிரி பசுமைக்குடில் நர்சரியில பல விதமான ஹைபிரிட் காய்கறி இரகங்கள் குழித்தட்டுகள்ல போட்டு 25-30 நாட்கள் வளர்த்து ரெடியா வைத்திருப்பாங்க. நாம் நாத்து வளர்க்க வேண்டிய வேலை இல்லை.

30 நாள் வயதான US 3140 ஹைபிரிட் தக்காளி நாற்று வாங்கி செடிக்கு செடி 2 அடி இடைவெளி  விட்டு நடனும். குழித்தட்டு நாத்துங்கிறதுனாலே வேர் அறுத்து போகாம நட முடிஞ்சுது.

நாட்டு இரகத்த விட உரமாகட்டும் மருந்தாகட்டும் ஹைபிரிட்டுக்கு மூணு மடங்கு கொடுத்தாகனும். உரங்களை கொடுக்க கொடுக்கத் தான் காய்ப்பு வரும்.

ஹைபிரிட் தக்காளியும். பயிர் செய்கிறதற்கு நாட்டு தக்காளிய விட நாலு மடங்கு செலவு செய்யணும். செஞ்சா அதுக்கான பலனை அடையலாம்.

அடியுரமாக 50 சென்டுக்கு 2 மூட்டை டி. ஏ. பி போட்டோம்.நடுத்தரக் கொடித் தக்காளிக்கு ஸ்திரமா கம்பம் நட்டு கொடி கட்டலன்னா காய் கனத்தத் தாங்காம செடி சாய்ந்துவிடும். ஆகவே, செடி வளர்ந்து 2 அடி வந்தவுடனேயே கொம்பு ஊன்றி கொடி கட்டனும். நட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மறுபடி 2 மூட்டை காம்ப்ளக்ஸ் உரம் வைக்கனும்.

சரியா 2 மாசத்துல முதல் அறுவடை எடுக்கலாம். இந்த கொடித் தக்காளி இரகம் கொத்துக் கொத்தா காய்க்கும். ஒரு கொத்துல 7-8 த்க்காளி இருக்கும். 3, 4 தக்காளிய எடை போட்டால் ஒரு கிலோ தேறும்.

மூணு நாளைக்கு ஒரு தடவை அறுவடை செய்யலாம். முதல் அறுவடைக்குப் பிறகு ஒரு மூட்டை பொட்டாஷ், ஒரு மூட்டை காம்ப்ளக்ஸ், ஒரு மூட்டை சி. ஏ. என் குளுகோஸ் மாதிரி. வாரத்துக்கு ஒரு முறை ஒரு மூட்டை சி. ஏ. என் போட்டாத்தான் கொடித் தக்காளி மறுபடி துளிர் எடுத்து காய்க்கும். 

மொத்தம் 1 1/2 மாசத்துல வருமானம் பூராவையும் எடுத்துடலாம். மூன்று நாளைக்கு ஒரு முறை 60 கால் தக்காளி கிடைக்கும். (1 கால் என்பது 80 கிலோ எடையாகும்) ஆக ஒரு பறிப்புக்கு 4800 கிலோ தக்காளி கிடைச்சது. ஆக 10 பறிப்பிலேயே 60 கால் (48டன்) தக்காளி அறுவடை செய்யலாம்.

click me!