நெல் இரகம் மற்றும் ஒட்டு இரகத்திற்கான கிட்டுகள் மாநில விவசாய துறைகளில் கிடைக்கப் பெறுகிறது. (NFSM கீழ்)
சான்றளிக்கப்பட்ட உயர்விளைச்சல் இரக விதை விநியோகத்திற்கான உதவி – ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 500 அல்லது விதையின் விலையில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.
ஒட்டு இரக விதை விநியோகத்திற்கான உதவி – ரூபாய் 2000 அல்லது விதையின் விலையில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.
ஒட்டு இரக உற்பத்திக்காக ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 1000 உதவியாக அளிக்கப்படும்.
நுண் ஊட்டச்சத்திற்கான உதவி – ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 500, அல்லது செலவில் 50 %, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.
அமிலத்தன்மையுடைய மண்ணிற்கு சுண்ணாம்பு அளிப்பதற்கான உதவி – ரூபாய் 500, ஒரு ஹெக்டருக்கு அல்லது 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.
கோனோவீடர் மற்றும் ஏனைய கருவிகள் வாங்குவதற்கான உதவி – ரூபாய் 3000, அல்லது கருவிக்கான விலையில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.
விதைக்கும் கருவி, களை எடுக்கும் கருவி போன்றவைக்கு, ரூ 15,000 ஒரு கருவிக்கு, அல்லது கருவிக்கான விலையில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.
ரோடேவேட்டர் வாங்குவதற்கான உதவி – ரூபாய் 30,000, அல்லது, கருவிக்கான விலையில் 50% இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.
நேப்சாக்கு தெளிப்பான் வாங்குவதற்கான உதவி – ரூபாய் 3,000 அல்லது கருவிக்கான விலையில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.
பயிர் பாதுகாப்பு இரசாயணங்கள் வாங்குவதற்கான உதவி – ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 500, அல்லது ஆகும் செலவில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.
மேம்படுத்தப்பட்ட செயல்முறை சாகுபடி, ஒட்டு இரகம் மற்றும் செம்மை நெல் சாகுபடோ ஆகியவற்றிற்கான கள செயல்விளக்கமும் அளிக்க உதவி பெறலாம்.
விவசாயிகளும் NFSM நடத்தும் விவசாய கள பள்ளிகளில் சேர்ந்து பயன் பெறலாம்.