குட்டைப்புடலை சாகுபடியில் நிகர லாபம் ரூ.16 ஆயிரம் எடுக்கலாம்…

 
Published : May 01, 2017, 12:48 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
குட்டைப்புடலை சாகுபடியில் நிகர லாபம் ரூ.16 ஆயிரம் எடுக்கலாம்…

சுருக்கம்

Net Profit at Mutual Cultivation

குட்டைப்புடலை சிறப்பியல்புகள்:

1.. நீட்டுப் புடலையைவிட குட்டைப்புடலையில் அதிக மகசூலினை எடுக்க முடியும்.

2.. குட்டைப்புடலையை கோணி சாக்குகளில் பேக் செய்து தொலைதூர மார்க்கெட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

3.. குட்டைப்புடலை சுவையில் மிகச்சிறந்தாக உள்ளது.

4.. குட்டைப்புடலையில் பயிர் பாதுகாப்பு செலவுகுறைவு.

5.. நீட்டுப்புடலையில் காய்கள் நீளமாக வளர காயின் நுனியில் கல்லைக்கட்டி தொங்கவிட வேண்டி வரும். இம்மாதிரியான நிர்பந்தம் குட்டைப்புடலையில் கிடையாது.

குட்டைப்புடலை சாகுபடி:

குட்டைப்புடலை சாகுபடி செய்வதற்கு முதலில் வயலின் நடுவே நேர் கால்வாய் எடுக்க வேண்டும்.

இவ்வாறு தயார் செய்த நிலத்தில் 144 குழிகள் வெட்ட வேண்டும்.

குழியில் மண், நன்கு மக்கிய தொழு உரம் இடவேண்டும்.

குழியில் நட பிளாஸ்டிக் பை நாற்று தயார் செய்ய வேண்டும்.

விதையை ஒரு பகல் பூராவும் தண்ணீரில் நன்கு ஊறவைத்து இரவு அதை வெளியே எடுத்து வைத்துவிட்டு மீண்டும் மறுநாள் காலையில் ஊறப்போட்டு ஆறு மணி நேரம் கழித்து பாலிதீன் பையில் விதைக்க வேண்டும்.

பாலிதீன் பையில் மக்கிய எரு, செம்மண் கலவையை நிரப்பி அதில் விதையை ஊன்றி பாசனம் செய்ய வேண்டும்.

விதைகள் அனைத்தும் ஏழு நாட்களில் பழுதில்லாமல் முளைத்துவிடும்.

நிலத்தில் 20 சென்ட் பரப்பில் விதைக்க கால் கிலோ விதை போதுமானதாக இருக்கும்.

பாலிதீன் பையில் வளரும் செடியின் வயது 35 நாட்கள் ஆனவுடன் அவைகளை விவசாயிகள் ஏற்கனவே தயார் செய்திருந்த குழிகளில் நடலாம்.

திடமான இரண்டு செடிகளை ஒரு குழியில் நடலாம்.

செடிகள் வளர்ந்துவரும்போது பந்தல் போட்டுக் கொள்ளலாம்.திடமான பந்தல் போட செலவு ரூ.1000 வரை ஆகலாம்.

குழியில் உள்ள செடிகள் நான்கு இலைகள் பருவம் அடைந்தவுடன் செடிகளுக்கு அருகில் குச்சி நட்டு கொடியை பந்தல் மேல் ஏற்றிவிடலாம். பந்தல் மேல் அது நன்றாக படர்ந்து வளரும்.

பந்தலில் ஏறும் செடிகளுக்கு குழியில் நன்கு மக்கிய தொழு உரம் இதனுடன் உயிர் உரங்களை நன்கு கலந்து வைக்க வேண்டும்.உடனே பாசனம் செய்யலாம்.

குழியில்  டிரைகோடர்மா விரிடி என்ற இயற்கை மருந்து பொடியை மணலுடன் கலந்து இடவேண்டும். ரசாயன உரங்களை போடாமல் செடியை வளர்க்கவும்.

சாகுபடி காலத்தில் இயற்கை பூச்சிக் கொல்லி மருந்துகளை பைட்டோபிராட் மற்றும் பெவேரியா பாசினியா (ஒரு லிட்டர் நீருக்கு 3 மில்லி மருந்தினை கலந்து) தெளிக்க வேண்டும்.

செடிகளுக்கு அறுவடை காலத்தில் புண்ணாக்கு உரங்கள் மற்றும் மக்கிய தொழு உரம் இவைகளை மேலுரங்களாக இடவும். செடிகளுக்கு ஆரம்ப காலத்தில் நல்லபடியாக களை எடுத்துவிட்டால் பின்னால் களையெடுக்கும் அவசியம் ஏற்படாது.

பயிர் பாதுகாப்பு பணியை சுமார் 60, 65 நாட்கள் கவனமாக செய்ய வேண்டும்.

மாசியில் நட்ட செடிகள் சித்திரைப் பட்டத்திலிருந்து நல்ல மகசூல் தரும்.

அறுவடை விவரங்கள்

சித்திரை மாத அறுவடை 400 கிலோ, வைகாசி மாத அறுவடை 600 கிலோ, ஆனி மாத அறுவடை 800 கிலோ, ஆடி மாத அறுவடை 800 கிலோ என கோடை மாதத்தில் குட்டைப்புடலை சாகுபடியில் மொத்தம் ரூ.25000 எடுக்க முடியும்.

சாகுபடி செலவு ரூ.9000 போக நிகர லாபம் ரூ.16000 எடுக்கலாம்.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?