கடந்த பல ஆண்டுகளுக்கு முன்புவரை வேளாண்மையில் மண்வள மேம்பாட்டிற்கும், பயிர் விளைச்சலுக்கும் பண்ணைக்கழிவுகள், கால்நடைக்கழிவுகளே இயற்கை உரங்களாக அதிக விளைச்சலை கொடுக்கும் பயிர் இரகங்களுக்கு ஏற்ப இரசாயன உரங்கள் கண்டறியப்பட்டு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அங்ககக் கழிவுகளை இயற்கை உரங்களை பயன்படுத்துவது பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டுகிறது. இதனால் அங்கக கழிவுகளை இயற்கை உரங்களை பயன்படுத்துவது பெரியளவில் குறைந்துவிட்டது. மண்ணில் உள்ள அங்கக பொருட்களின் அளவே மண்ணின் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதுடன், மண்ணின் அறிவியல் பண்புகளையும் நிர்ணயிக்கிறது.
தற்கால வேளாண்மையில் பாரம்பரிய முறைகளான தொழு உரம் இடுதல், ஆட்டுக்கிடை போடுதல், பசுந்தாள் உரங்கள் இடுதல் போன்றவற்றை தவிர்த்து ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பெருகி வரும் மக்கள் தொக்கைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில் நாம், நம் பராம்பரிய அங்கக வேளாண்மையை கடைபிடிப்பது அவசியமாகும்.
அந்த வகையில் நம் பாரம்பரிய தொழில்நுட்பங்களில் ஆட்டுக்கிடை போடும் முறை மண்ணின் வளத்தை சீராக மேம்படுத்தும் முக்கிய காரணியாக உள்ளது. பகலில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை இரவில் வயலில் வேலியிடப்பட்ட குறிப்பிட்ட இடத்தில் தங்க வைப்பது ஆட்டுக்கிடையாகும்.
இரவில் தாங்கும் ஆடுகளின் கழிவுகளான சாணம், சிறிநீர் ஆகியவற்றை வயலில் சேகரிக்கப்படுவதே முக்கிய நோக்கமாகும். ஆட்டுச்சாணம், சிறுநீரில் அதிகளவில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் உள்ளன.
ஆட்டுக்கிடை போடும் தொழில்நுட்பம் தென் தமிழகத்தில் பிரபலம், நெல், வாழை, கரும்பு பயிடப்படும் நஞ்சை நிலத்திலும், காய்கறி பயிரிடப்படும் தோட்டக்கால் நிலம், மானாவாரிக் கரிசல் நிலத்திலும் ஆட்டுக்கிடை போடப்படுகிறது.
தற்போதும் தென்மாவட்டங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மக்கள் ஆட்டுக்கிடை முறையை பின்பற்றி வருகின்றணர். பல இடங்களில் தமிழகத்தின் தட்பவெப்பத்திற்கு ஏற்ப செம்மறி ஆட்டு இனங்களை போடுகின்றனர். ஆட்டு எருவில் 0.9 மற்றும் 1.0 சதவீதம் முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்கள் உள்ளன.
ஆட்டுக்கிடையை போடுவதால் நிலத்தில் அங்கக பொருட்களின் அளவு அதிகரிக்கின்றது. நீர்ப்பிடிப்பு திறன், மண்ணின் நயம், மண்ணின் காற்றோட்டம், மண்ணின் அடர்வு போன்ற மண்ணின் பெளதீக தன்மைகள் மேம்படுகின்றன. உவர், களர் நிலத்தில் ஆட்டுக்கிடை போடும் பொழுது மண்ணின் ரசாயன பண்புகள் மேம்படுத்தப்பட்டு மண்வளம் சீர்படுகின்றது.
மணற்பாங்கான நிலத்தில், மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்க வைக்கும் திறனை அதிகப்படுத்துகிறது. மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் திறனை அதிகப்படுத்துகிறது. மண்ணில் உள்ள பல வகையான நுண்ணுயிரிகள் பாதுகாக்கப்படுவதுடன் அதன் செயல்பாடுகள் அதிகமாகின்றன.
வயலில் கிடை போடுவதன் மூலம் வயலுக்கு எரு ஏற்றி செல்லும் செலவு மிச்சமாகிறது. குறைந்த செலவில் பயிருக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் தேவையான அளவில் தேவையான விகிதத்தில் கிடைக்கின்றன.
மேலும், பயிர் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் களைகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சத்துக்கள் அனைத்தும் பயிருக்கு உடனடியாகக் கிடைக்கின்றன. இதனால் மண்ணிற்கு எந்த கெடுதலும் இருப்பதில்லை.