இயற்கை முறையில் கருவேப்பிலை சாகுபடி இப்படிதான் செய்யணும்...

 
Published : Apr 26, 2018, 11:53 AM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
இயற்கை முறையில் கருவேப்பிலை சாகுபடி இப்படிதான் செய்யணும்...

சுருக்கம்

Natural curry leaves cultivation

கருவேப்பிலை சாகுபடி

இரகங்கள் : 

செண்காம்பு, தார்வாடு 1 , தார்வாடு 2.

மண் மற்றும தட்பவெப்பநிலை : 

சிறந்த வடிகால் வசதியுடைய செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை. வெப்பநிலை 26 முதல் 27 வரை இருப்பது இதன் வளர்ச்சிக்குப்  பெரிதும் உதவும்.

பருவம் : 

ஜூலை – ஆகஸ்ட் மாதம்

நடவு:

விதைகளை பறித்த 3-4 நாட்களில் பாலித்தீன் பைகளில் விதைக்கவேண்டும். ஒரு வயதுடைய நாற்றுக்கள் நடவுக்கு உகந்தவை.

நிலம் தயாரித்தல்

நிலத்தினை நன்கு உழுது மண்ணைப் பண்படச்செய்தல் வேண்டும்.

கடைசி உழவின்போது மக்கிய தொழு உரம் ஒரு எக்டருக்கு 20 டன் என்ற அளவில் இடவேண்டும்.

1.2 முதல் 1.5 மீட்டர் இடைவெளியில் 30x30x30 செ.மீ என்ற அளவில் குழிகள் எடுத்து 2-3 மாதம் கழித்து நடவு செய்யவேண்டும்.

குழகளின் நடுவே ஒரு நாற்றினை நடவு செய்யவேண்டும்.

நீர் நிர்வாகம்:

நடவு செய்தவுடன் தண்ணீர் பாசனம் செய்யவேண்டும்.

உயிர் தண்ணீர் மூன்றாவது நாளும் அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.

பின்நேர்த்தி

களையினை அவ்வப்போது நீக்கவேண்டும்.

நடவு செய்த முதலாம் ஆண்டில் பயறுவகைப் பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.

கருவேப்பிலை செடிகள் 1 மீட்டர் வளர்ந்தவுடன் நுனிக்கொழுந்தினை கிள்ளிவிடுவதன் மூலம் பக்க கிளைகளின் வளர்ச்சி தூண்டப்படுகின்றது.

ஒரு செடிக்கு 5-6 கிளைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

செதில் பூச்சி மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள்:

இவற்றை கட்டுப்படுத்த டைமெத்தோயேட் 1 மில்லி மருந்தினை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

இலைப்புள்ளி நோய்

கார்பன்டாசிம் 1 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். கந்தக மருந்துகளை இப்பயிருக்கு பயன்படுத்தக்கூடாது.

மகசூல்:

முதல் வருடம் - ஒரு எக்டரிலிருந்து 250-400 கிலோ தழை

இரண்டாம் வருடம் - 4 மாதத்திற்கொருமுறை 1800 கிலோ தழை (ஆண்டு ஒன்றுக்கு 5400 கிலோ / எக்டர்)

மூன்றாம் வருடம் - 5400 கிலோ / எக்டர்

நான்காம் வருடம் - 3 மாதத்திற்கொருமுறை 2500 கிலோ / எக்டர் (ஆண்டு ஒன்றுக்கு 10,000 கிலோ / எக்டர்)

ஐந்தாம் வருடம் - 3 மாதத்திற்கொருமுறை 5000 கிலோ / எக்டர் (ஆண்டு ஒன்றுக்கு 20000 கிலோ / எக்டர்)


 

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?