இஞ்சியைத் தாக்கும் பலவிதமான பூச்சிகளில் பெரும்பான்மையானதும், முக்கியமானதும் “குருத்துத் துளைப்பான்” பூச்சி.
இது இஞ்சியைத் தாக்கி அதனை சேதப்படுத்தி மகசூலில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த குருத்துத் துளைப்பானை கட்டுப்படுத்துவது எப்படி?
அ.. பூச்சி தாக்காத நல்ல விதை கிழங்குகளைத் தேர்வு செய்து சேமிக்க வேண்டும்.
ஆ. தாக்கப்பட்ட குருத்து, கிழங்கைச் சேகரித்து அழிக்க வேண்டும்.
இ. விதைக் கிழங்குகளை டைகுளோரிவாஸ் 2 மி.லி. அல்லது மோனோகுரோட்டோபாஸ் 1.5 மி.லி. 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து அக்கரைசலில் நனைய வைத்து நிழலில் உலர்த்திய பிறகு நட வேண்டும்.
ஈ. மோனோ குரோட்டோபாஸ் 2.0 மி.லி. அல்லது குளோன்பைரிபாஸ் 2 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதால் குருத்துத் துளைப்பான் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.