குளிர்ச்சி பகுதிகளான கொடைக்கானல், ஏர்காடு, சேர்வராயன் உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு இதுதான் சிறந்த பயிர்…

 |  First Published Jan 17, 2017, 1:57 PM IST

குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களில் அதிகளவில் பயிரிடப்படும் பயிர் காசினிக்கீரை. இது இரு ஆண்டு தாவரம்.

முதலாமாண்டில் ஆழமான ஆணிவேரும், கொத்தான இலைகளும், 2-ம் வருடத்தில் பூக்களும் உற்பத்தியாகின்றன.

Latest Videos

undefined

உலகளவில் இந்தியா காசினிக்கீரை உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கியமானது. காசினி பூக்கள் உற்பத்தியாவதற்கு குளிர்ச்சியான தட்ப வெப்பநிலை அவசியம். காசினிக்கீரை வளர்வதற்கு மலைப்பிரதேசம், குளிர்ச்சி பகுதிகளான கொடைக்கானல், ஏர்காடு, சேர்வராயன் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

காசினியிலுள்ள பிரிபையாரிக பொருட்களான இனுவின், ஒலிகோ பிரக்டோஸ் ஆகியவை இயற்கையான நார்ச்சத்துக்களாக கருதப்படுகின்றன. காசினி பலவகைப்பட்ட மண்வகைகளிலும் வளரும் தன்மையுடையது. இருந்த போதிலும் குறைந்த வடிகால் வசதியுள்ள, இறுக்கமான மண் வகைகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது வேரின் வளர்ச்சி, நடவு, அறுவடை போன்ற செயல்களை பாதிக்கும். இதனை குறைந்த அளவு நைட்ரஜன் உள்ள மண்ணில் வளர்ப்பது சிறந்ததாகும்.

இதில் உள்ள சிக்கரி ரகங்களான வேர்காசினி, சாலடு காசினி போன்றவை மேலைநாடுகளில் பயிரிடப்படுகிறது. இவற்றில் வேர்காசினி, சாலடு காசினி போன்றவை மேலைநாடுகளில் பயிரிடப்படுகிறது. இவற்றில் வேர்க்காசினி என்பது பயிரினுடைய கிழங்கினை காயவைத்து பதப்படுத்தி பவுடராக மாற்றி காப்பியில் சேர்ப்பதால் சுவையைக் கூட்டித்தரும்.

அதே போன்று சாலடு காசினியானது கீரை வகை போன்றது. இதனுடைய இலைகளை உரிய பருவத்தில் அறுவடை செய்து உலர்த்தி தேனீர் இலைகளை போன்று பொடி செய்து தேனீரோடு சேர்த்து தனிச்சுவையுடன் பருக பயன்படுகின்றது.

பொதுவாக காசினி செடிகள், விதை மூலம் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. இதற்கு ஒரு எக்டேருக்கு சுமாராக 5 கிலோ விதை வரை தேவைப்படுகிறது. நிலத்தை நன்றாக உழவு செய்து ஒரு எக்டருக்கு 15 டன் தொழு எரு இட்டு, நிலதை நன்கு சமப்படுத்தி மண்ணை பண்படுத்தி, இரண்டு மீட்டர் நீளம். ஒரு மீட்டர் அகலம் மற்றும் 15-20 செ.மீ உயரமுள்ள நாற்றங்காலில் விதைகளை வரிசையாக மணல் போட்டு மூட வேண்டும்.

வாரம் இருமுறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். காசினி செடிகள் விதைத்த ஒரு வாரத்திற்குள் முளைத்துவிடும். நாற்றுகள் ஓரளவு வளர்ந்ததும்   . செடிகளுக்கிடையே 5 செ.மீ இடைவெளி இருக்கும்படி கலைத்துவிட வேண்டும்.

இவ்வாறு பராமரிக்கப்பட்ட நாற்றுகள் 15-20 நாளில் வயலில் நட தயாராகிவிடும். பின், நல்ல குளிர்ச்சி மிகுந்த பகுதிகளிலோ, தோப்புகளிலோ பார்கள் அமைத்து, பார்களின் பக்கவாட்டில் நாற்றுகளை நட வேண்டும்.

வரிசைக்கு வரிசை 38 செ.மீ இடைவெளியும் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். இந்த செடி நோய் மற்றும் பூச்சி தாக்குதலில் தகுந்த நடைமுறைகளை பயன்படுத்த வேண்டும்.

இதன் வேர்கள் நன்று முதிர்ச்சியடைந்து பின்பே அறுவடை செய்ய வேண்டும். பின்பே அறுவடை செய்ய வேண்டும். பொதுவாக நடவு செய்த 123 நாட்களில் அறுவடை செய்யலாம்.

இதன் தண்டுப்பாகம் நேராகவும், வேர்ப்பாகம் கீழாகவும் காணப்படும். பூக்கள் ஊதா நிறமாகவும் இருக்கும். பொதுவாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டங்களில் இவை அறுவடை செய்யப்படுகின்றது. அடர்த்தி வேரின் தரத்தைப் பொறுத்து சிக்கோன் அளவு அமையும்.

இந்த ரகம் ஆணிவேரின் தரத்தை பொறுத்து மாறுபடும். அறுவடையை தொடர்ந்து வேர்களை 0.20 செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 95-98 சதவீதம் ஈரப்பதமுள்ள குளிர்ச்சாதன அறைகளில் இரண்டு வாரங்கள் வைத்திருக்க வேண்டும்.

அறுவடை செய்த பின் இரண்டு வாரங்களுக்கு 1 செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும்.

click me!