அசோலா
** பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம்.
** மிக சிறிய இலையையும் துல்லியமான வேர்களையும் கொண்டவை. தண்டு மற்றும் வேர்பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும்.
** பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் இருக்கும்.
** வேகமாக வளரும் தன்மை கொண்டவை.
அசோலா வளர்ப்பில் பயன்படுத்தப்படும் மாற்று இடுபொருட்கள்
** புதிய சாணத்திற்க்கு பதிலாக சாண எரி வாயு கலனில் இருந்து வெளியேறும் சாணத்தை உபயோகப்படுத்தலாம்.
** குளியலறை மற்றும் மாட்டுகொட்டகையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை அசோலா குழியில் நிரப்ப பயன்படுத்தலாம்.
அசோலா உற்பத்தியில் முக்கியமாக கவனிக்க படவேண்டியவை
** அசோலாவை சல்லடை கொண்டு அலசும்போது கிடைக்கும் நீரில் உள்ள சின்ன சின்ன அசோலா நாற்றுகளை திரும்ப தொட்டியில் ஊற்றலாம்.
** தொட்டியில் உள்ள நீரின் வெப்பநிலையை 250C கீழே இருக்குமாறு பார்த்து கொள்ளவேண்டும்.
** நிழல் வலைகளை உபயோகப்படுத்தி வெளிச்சத்தின் அளவை குறைக்கலாம்.
** அசோலாவை தினமும் அறுவடை செய்து தொட்டியில் ஏற்படும் இடநெருக்கடியை குறைக்கலாம்.