இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி செய்யலாமா? விதை தேர்வு முதல் அறுவடை வரை...

 |  First Published May 9, 2018, 1:50 PM IST
Is it possible to grow yellowish in nature? Seed Selection to First Harvest



இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி...

மஞ்சளில் விதை தேர்வு...

நிலத்தின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை இவற்றைப் பொருத்து நல்ல மஞ்சள் ரகங்களை விதைக்காகத் தேர்வு செய்ய வேண்டும். இயற்கைமுறையில் தேர்வு செய்த விதைகள் நல்லது. 

விரலி மஞ்கள் அல்லது கிழங்கு (குண்டு) மஞ்சளை விதையாகப் பயன்படுத்தலாம். ஒரு ஏக்கர் நடவு செய்ய 600-800 கிலோ மஞ்சள் தேவை.

விதை நேர்த்தி...

மஞ்சளை அறுவடை செய்தவுடன் செதிள் பூச்சி மற்றும் பூஞ்சணம் தாக்காதவாறு விதை நேர்த்தி செய்ய வேண்டும். மஞ்சளை நடுவதற்கு முன்பும் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனால் விதை முளைப்புத் திறன் நன்கு இருக்கும். பூச்சி மற்றும் பூஞ்சாணத் தாக்குதல் இருக்காது.

அறுவடை செய்தவுடன் விதை நேர்த்தி...

600-800 கிலோ விதை மஞ்சளுக்கு பஞ்சகவ்யம் – 2 – 5 லிட்டர் சூடோமோனஸ்- 1- 2 கிலோதண்ணீர் – தேவையான அளவுஇவற்றை நன்கு கலக்கி விதை மஞ்சள் நன்கு மூழ்குமாறு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 

பின்னர் விதை நேர்த்தி செய்த மஞ்சளை நிழலில் உலர வைத்து பின்னர் பாதுகாப்பான இடத்தில் வெப்பம் மற்றும் தண்ணீர் புகா வண்ணம் சேமிக்க வேண்டும். மஞ்சள் நடவு செய்வதற்கு முன்பாக மற்றுமொருமுறை விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நடவு முன் விதை நேர்த்தி...

ஆவூட்டம் – 2 லிட்டர்சூடோமோனஸ் – 1 கிலோதண்ணீர் – 100 லிட்டர்இவற்றை நன்கு கலந்து விதை மஞ்களை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் நடவு செய்யலாம். இவ்வாறு செய்தால் முளைப்புத் திறன் அதிகரிக்கும். செதில் பூச்சி, பூஞ்சாணத் தாக்குதல் வெகுவாகக் கட்டுப்படும்.

நிலத்தேர்வு மற்றும் நிலப்பராமரிப்பு...

மஞ்சள் பயிரிட்ட தோட்டத்தில் மற்றுமொருமுறை மஞ்சளை பயிரிடக் கூடாது. இவ்வாறு பயிரிட்டால் நூற்புழுத் தாக்குதல் அதிகமாகி பயிர் வளர்ச்சி குன்றி மகசூல் வெகுவாகப் பாதிக்கும். 

அதுபோல் நூற்புழு அதிகம் தாக்கும் வாழை, மிளகாய், தக்காளி, கத்தரி, கனகாம்பரம் சாகுபடி செய்த தோட்டத்தில் மஞ்களைப் பயிரிடக் கூடாது. மாற்றுப் பயிராக கரும்பு, நெல் அல்லது தானியப்பயிர்கள் பயிரிடலாம். 

பயிர் சுழற்சி செய்வது மிகவும் அவசியம். ஆகவே மஞ்சள் பயிரிட்ட தோட்டத்தில் ஒரு வருடம் இடைவெளிவிட்டு மாற்றுப் பயிர் செய்த பின்பு மஞ்சளைப் பயிரிடலாம். நிலத்தை 3-4 முறை உழ வேண்டும். 

கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு 10 டன் மக்கிய தொழுஉரம் இட வேண்டும் அல்லது 2 டன் மண்புழு உரம் இட வேண்டும். நிலத்தில் சாம்பல் சத்து குறைபாடு இருந்தால் நெல் உமிச் சாம்பல் ஒரு ஏக்கருக்கு 500கிலோ வீதம் (1 டிப்பர்) கடைசி உழவின்போது இடலாம்.

அறுவடை...

7 முதல் 9 மாதம் கழித்து மஞ்சள் அறுவடை செய்யலாம். பச்சை வண்ணம் மாறி இலை மஞ்சள் வண்ணமாகி வாடத் தொடங்கும். அச்சமயம் தாள்களை அறுக்கத் தொடங்கலாம். 

இதன் பின்னர் ஒரு மாதம் கழித்து மண்வெட்டி கொண்டு கிழங்கு மற்றும் விரலியைச் சேதப்படுத்தாமல் அறுவடை செய்ய வேண்டும்.
 

click me!