வீட்டுத்தோட்டம் அமைக்க என்ன தேவை...
வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைக்க நமக்கு அதிக செலவு ஆகாது. முதலில் செடி வளர தேவை படுவது மண் தான். எனவே நமது இடம் மண்ணை கொட்டுவதற்கு ஏற்றவாறு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
undefined
நமது காலி இடம் மண் தரை என்றால் நாம் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியது இல்லை. அல்லது காலி இடம் சிமென்ட் தரை என்றால் நாம் கொஞ்சம் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் நாம் நேரிடையாக மண்ணை சிமென்ட் தரையில் கொட்டக்கூடாது. அதுவும் மொட்டை மாடி என்றால் மிகவும் ஆபத்து.
அப்படி நாம் கொட்டி பயிரிடும் போது ஊற்றப்படும் நீர் தரையில் இறங்கி பல விளைவுகளை ஏற்படுத்தும். இதை தவிர்க்க நாம் மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் பைகளை உபயோகபடுத்துவது சிறந்தது.
நகரங்களில் மண்தொட்டிகள் கிடைப்பது சிரமம் அதற்கு மாற்றாக HDPE GROW BAGS எனப்படும் பிளாஸ்டிக் பைகள் சந்தையில் வெவ்வேறு அளவுகளில் தேவைக்குதக்கவாறு கிடைக்கிறது.
மேலும் மண் கிடைப்பது சிரமம் ஆதலால் அதற்கும் மாற்றாக தென்னைநார் கழிவு மண்புழு உரம் கலந்து பயன்படுத்துதல் எளிதானது.எடை குறைவானது.தென்னைநார் கழிவு நன்கு அமுக்கப்பட்டு அதனைச்சேர்த்தே HDPE GROW BAGS சந்தைகளில் கிடைக்கிறது.அதனை பயன்படுத்தலாம்.
தேவையானவை
** காலி இடம்
** நிலம் அல்லது மண்
** மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் பை (தேவைப்பட்டால்)
** கொஞ்சம் தண்ணீர்(வீணாகும் நீரையும் பயன்படுத்தலாம்
** வீட்டு குப்பைகள்(உரமாக பயன்படுத்தலாம்)
** கொஞ்சம் விதைகள்(சில விதைகள் நமக்கு சமையலறை கழிவுகளிலேயே கிடைக்கும்)
** தினமும் கொஞ்சம் நேரம்(பராமரிக்க).
இவைகளை வைத்துக்கொண்டே நாம் சிறந்த முறையில் பயிர் செய்யலாம்.