அயல் மகரந்த சேர்க்கைப் பயிரான சூரியகாந்தி
1.. ஏக்கர் ஒன்றுக்கு 2 தேனீப் பெட்டிகள் வீதம் வைத்து தேனீக்களை வளர்ப்பதன் மூலம் மகரந்த சேர்க்கையை ஊக்குவித்து நல்ல மகசூல் பெறலாம்.
undefined
2.. தேனீக்கள் மூலம் ஏக்கர் ஒன்ருக்கு ஆண்டிற்கு சுமார் ரூ.500/- உபரி வருமானமும் பெறலாம்.
3.. பூக்கும் தருணத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுமார் 5 முறை பூவின் மேல் பாகத்தை மெல்லிய துணியால் மெதுவாக ஒத்திக் கொடுக்க வேண்டும்.
4.. இரு கொண்டைகளையும் ஒன்றோடு ஒன்று முகம் சேர்த்து மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும்.
5.. குறுகிய இரகங்களில் விதைத்த 45 முதல் 48 நாட்களிலும், நீண்ட கால ரகங்களில் 58 முதல் 60 நாட்களிலும், காலை 9 முதல் 11 மணி வரையிலும் மகரந்த உற்பத்தி அதிகமாக இருப்பதால் அப்போது செயற்கை முறையில் மகரந்த சேர்க்கை செய்வது நல்லது.
6.. இம்முறையினால் விதைப் பிடிப்பைச் சுமார் 25% வரை அதிகப்படுத்தலாம்.
இப்படி சூரியகாந்தியை ஊக்குவிப்பதன் மூலம் நல்ல லாபம் அடையலாம்.