மண் புழு உரம் தயாரிக்க தேவைப்படும் தொட்டியை எவ்வாறு அமைப்பது?

 |  First Published Feb 22, 2018, 1:52 PM IST
How to set up a pot to make soil worm fertilizer?



மண் புழு உரம் தயாரிக்க தேவைப்படும் நான்கு அறை தொட்டி:

** நான்கு அறை தொட்டிகளின் மூலம் புழுக்கள் ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு எளிதாக செல்கின்றன. 

** இதன் மூலம், புழுக்கள் ஒரு அறையில் உள்ள கழிவுகள் நன்கு மட்கியவுட மண்புழு படுக்கை தயாரித்தல் மண்புழு படுக்கை 

** அடிப்பாகத்தில் சிறு கல் மற்றும் மணலின் (5 செமீ உயரம்) மேல் சுமார் 15-20 செமீ உயரத்திற்கு ஈரப்பதத்துடன் கூடிய வண்டல் மண் பரப்பப்பட்ட படுக்கை அமைக்க வேண்டும்.

** குழியை 2 மீ x 1 மீ x 0.75 செமீ என்ற அளவிலும், மண்புழு படுக்கை 15 - 20 செமீ என்ற அளவிலும் அமையக்க வேண்டும்.

** கையளவு மாட்டுச்சாணத்தை படுக்கையின் மீது தூவ வேண்டும். பின்பு 5 செமீ உயரத்திற்கு வெட்டிய வைக்கோலையோ அல்லது இயற்கை கழிவுகளையோ இட வேண்டும். 

** அடுத்த 30 நாட்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் நீர் தெளித்து ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

** படுக்கை வறண்டோ அல்லது சொதசொதப்பாகவோ இருக்கக்கூடாது. பறவைகளிடம் இருந்து காக்க தென்னை அல்லது பனை ஓலைகள் அல்லது கோணிப்பைகள் கொண்டு மூடி வைக்க வேண்டும்.

** பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கக் கூடாது.(வெப்பத்தை இழுக்கும் தன்மையுடையது)

** 30 நாட்கள் கழித்து ஈரப்பதமுடைய தாவரம் அல்லது கால்நடைக் கழிவுகள், சமையலறை, உணவகம், வயல் போன்ற இடங்களில் இருந்து சேகரித்த கழிவுகள் ஆகியவற்றை சரி செய்து 5 செமீ அளவிற்கு நிரப்ப வேண்டும்.

** இவ்வாறு வாரம் இருமுறை செய்ய வேண்டும்.

** இந்த இயற்கை கழிவுகளை மண்வெட்டி கொண்டு கலக்கிவிட வேண்டும்.

** முறையாக நீர் தெளித்து, சரியான அளவு ஈரப்பதத்தை பராமரிக்க வேண்டும். வானிலை வறட்சியாக இருந்தால் அடிக்கடி நன்றாக நீர் தெளிக்க வேண்டும்.

click me!