வான்கோழிகளை அடைக்கு வைப்பதில் எவ்வளவு முறைகள் இருக்கு தெரியுமா?

 |  First Published Feb 17, 2018, 12:51 PM IST
How to protect turkeys



 

வான்கோழிகளில் அடைகாக்கும் காலம் 28 நாட்களாகும். முட்டைகளை அடைக்குவைப்பதில் உள்ள முறைகள்:

Tap to resize

Latest Videos

1.. இயற்கையாக வான்கோழிகளைக் கொண்டு அடைகாத்தல் :

இயற்கையாகவே வான்கோழிகள் நன்கு அடைகாக்கும் திறனுடையவை. நல்லஅடைகாக்கும் வான்கோழிகள் பத்து முதல் பதினைந்து முட்டைகள் வரைஅடைகாக்கும். சுத்தமான, நல்ல வடிவமுடைய முட்டைகளை அடைக்கு வைத்தால் 60 முதல் 80 சத முட்டைகள் பொரிந்து ஆரோக்கியமான குஞ்சுகள் கிடைக்கும்.

2.. வான்கோழி முட்டைகளை அடைக்கு வைத்து குஞ்சு பொரித்தல்

வான்கோழிகள் பொதுவாக முட்டையிடும்போதே அடைபடுத்தலில் ஈடுபடுகின்றன. இத அவைகளின் பாரம்பரிய குணம் ஆகும். வான்கோழிகள் நாட்டுக்கோழிகளைக் காட்டிலும் அதிக அளவு அடைகாக்கும் திறன் உடையது. வான்கோழிகளின் முட்டைகளை இரண்டு முறைகளில் அடைக்கு வைக்கலாம். 1. நாட்டுக்கோழி (அ) வான்கோழிகளில் அடைக்கு வைத்து குஞ்சு பொரித்தல். (2) குஞ்சு பொரிக்கும் கருவி (இன்குபேட்டர்)யில் வைத்து குஞ்சு பொரித்தல்.

3.. நாட்டுக்கோழி (அ) வான்கோழி மூலம் அடைக்கு வைத்தல்: 

வான்கோழிகளின் கருவுற்ற முட்டைகளை கண்டறிந்து அவற்றை முதலில் சேகரிக்க வேண்டும். பிறகு அவற்றை நாட்டுக்கோழிகளில் அடைக்கு வைக்க வேண்டும். நாட்டுக்கோழிகளில் அடைவைத்து குஞ்சு பொரிக்கும்போது 7 முட்டைகளை ஒரே சமயத்தில் அடைக்கு வைக்கலாம். வான்கோழிகளில் அடைக்கு வைத்தால் 10முட்டைகள் வரை வைக்கலாம். வான்கோழி முட்டைகளை அடைக்கு வைத்த நாளிலிருந்து 28 நாட்களில் குஞ்சுகள் பொரித்து வெளிவந்துவிடும்.

click me!