புதினாவுக்கு ஏற்ற மண் வகைகள்
வளமான ஈரப்பதம் உள்ள மண், புதினா விவசாயத்திற்கு மிகவும் அவசியமாகும். புதினா களிமண், வண்டல் மண், ஆற்று படுகை மண்களில் நன்றாக வளரக் கூடியது.
மித வெப்பமான பகுதிகளில் வடிகால் வசதியுள்ள செம்மண் நிலத்தைப் பண்படுத்தி மக்கிய தொழு உரம் இட்டால், புதினா நன்கு வளரும்.
பாத்தி கட்டி புதினா நாற்றை நடவு செய்யவேண்டும்.
நீர் மற்றும் உர மேலாண்மை
புதினா சாகுபடிக்கு உப்பு நீரையோ, சப்பை நீரையோ பாய்ச்சினால், அது விளைச்சலைப் பாதிக்கும். எனவே நல்ல தண்ணீரை மட்டும் பாய்ச்ச வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை நல்ல தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும்.
பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்காது. சில இடங்களில் வெள்ளைப் பூச்சி அல்லது புரோட்டான் கருப்புப் புழு தாக்குதலோ இருந்தால் இஞ்சி பூண்டு கரைசல் தெளிக்கலாம். புதினாவிற்கு தொழு உரத்தை தவிர வேறு உரங்கள் தேவையில்லை. ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் உரமிடவேண்டும்.
அறுவடை
60 நாட்களில் பறிக்கும் நிலைக்குத் தயாராகிவிடும். ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் கிலோவரை பறிக்கலாம்.
சீசன் காலங்களில் ரூ.50 முதல் 80 வரை விலை போகிறது.
சீசன் இல்லாத காலங்களிலும் ஒரு கிலோவுக்கு ரூ. 40 கிடைக்கும்.
செலவு போக அதிகபட்சமாக ரூ.1½ இலட்சம் வரை ஒரு அறுவடையில் லாபம் பார்க்கலாம். நான்கு ஆண்டுகள் வரை தொடர்ந்து 60 நாட்களுக்கு ஒரு முறை புதினாவை அறுவடை செய்து கொண்டே இருக்கலாம்.