முயல், பன்றி:
முயல் பண்ணை வைத்திருப் பவர்களும் அசோலாவைப் பயன்படுத்தலாம். இதனால் பசுந்தீவன பிரச்னை தீரும். ஒரு முயலுக்கு 75-100 கிராம் வரை தரலாம். இதனால் அதிக ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு உதவியாய் இருக்கும். பன்றிகளுக்கு தரும்பொழுது அதிக எடை தரக்கூடியதாக இருக்கும். அதிக லாபம் பெற முடியும்.
மாடு, ஆடு, கோழி:
மாடுகளுக்கு அசோலா தினமும் ஒன்றரை முதல் இரண்டு கிலோ வரை கொடுக்கலாம். அதனால் அதிகப்படியான பால் கிடைக்கும். மாடுகள் அதிகம் ஆரோக்கியமாக இருக்கும். தவிடு மற்றும் வைக்கோலைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக 40 சதவீதம் அசோலா பயன்படுத்தலாம். இதனால் உற்பத்தி செலவு குறைவு. பொருட்செலவு கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக லாபம் கிடைக்கும்.
செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பவர்கள் அசோலாவைப் பயன்படுத்து வதன்மூலம் அதிகப்படியான வளர்ச்சி மற்றும் அதிக எடை கிடைக்கும்.
கோழிகளுக்கு கொடுக்கும்போது முட்டை அதிக எடை கிடைக்கக்கூடும்.
மீன்:
மீன் பண்ணைகள் இப்பொழுது பலர் வைத்துள்ளனர். அசோலா அங்கும் பெரும்பங்கு வகிக்கின்றன. மீன் குஞ்சு விட்ட 35 நாட்களுக்கு மேல் 1000 குஞ்சுகளுக்கு தினமும் 2 கிலோ வரை பரவலாக தூவ வேண்டும். இதில் கெண்டை வகை மீன்கள் 100 நாட்களைத் தாண்டும்பொழுது முக்கால் முதல் ஒரு கிலோ வரை எடைகூடும்.
மனிதர்களுக்கு:
மனித வாழ்வின் மாற்றத்தை தரப்போகும் அசோலா கால்நடைகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் இதை ஒரு வகை கீரை எனக்கூறலாம். (பெரணி) மேலும் வைரஸ் காய்ச்சல்களை பரப்பும் கொசுக்களை அழிக்கும். இதை வீடுகளில் கூட சிறிய அளவில் வளர்க்கலாம்.