சப்போட்டா சாகுபடியில் 25 டன் வரை மகசூல் பெறுவது எப்படி?

 |  First Published May 12, 2017, 12:46 PM IST
How to get yield up to 25 tons of sapota cultivation?



இரகங்கள்

கிரிக்கெட் பால், ஓவல், பாராமசி, தகரப்புடி, துவாரப்புடி , கீர்த்தபர்த்தி, பாலா, காளிப்பட்டி, கோ.1, கோ 2, பெரியகுளம் 2, பெரியகுளம்  3 , பெரிய குளம் 4 , பெரிய குளம் 5.

Tap to resize

Latest Videos

பருவம்:

ஜீலை - ஆகஸ்ட்

மண்

சப்போட்டா பயிர் எந்த மண் வகை மண்ணிலும் செழித்து வளரக் கூடியது. நல்ல வடிகால் வகரியான மண் ஏற்றது.

ஆழமான வண்டல் மண் கலந்து நிலங்கள் மிகவும் உகந்தது.

சப்போட்டா ஓரளவு உப்புத் தண்மையுள்ள நிலங்களிலும் உப்புத் தன்மை கொண்ட நீரையும் தாங்கி வளரக்கூடியது.

பயிர்  பெருக்கம்:

ஒட்டுக்கட்டிய செடிகள் நடுதல். சப்போட்டா பயிரிட 8 மீட்டருக்கு இடைவெளியில் 60 செ.மீ நீளம், அகலம், 60 செ.மீ ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்கப்படவேண்டும். குழிகளை சிறிது நாட்களுக்கு ஆறவிடவும். 10 கிலோ மக்கிய தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு, மேல் மண் காலங்களிலேயே செடிகள் நடப்படுதல் வேண்டும். செடிகள் நட்ட உடன், செடிகளுக்கு இருபுறமும் குச்சிகள் வைத்துக் கட்டுவதன் மு{லம் காற்றில் செடிகள் ஆடிச் சேதமடைவதைத் தவிர்க்கலாம்.

நீர் நிர்வாகம்

மகரந்தச் சேர்க்கை நல்ல முறையில் நடைபெற்று, காய்கள் அதிகம் பிடிக்க, குறைந்த பட்சம் 2 அல்லது 3 மரங்கள் இருக்குமாறு பார்த்து நடவும். செடிகள் நட்ட சிறிது நாட்களுக்கு, 2 முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை பின்னர் 4 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை என்ற அளவிலும் நீர் ஊற்றவேண்டும். ஒரு வருடத்திற்குப் பிறகு 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை என்ற அளவில் நீர் பாய்ச்சலாம். இப்பயிர் சிறந்த முறையில் வறட்சியை்த தாங்குவதால், மானாவாரிப் பயிராகவே பயிர் செய்யலாம்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

சாதாரணமாக செடிகள் நடும்போது இராசயன உரம் எதுவும் இடவேண்டியதில்லை. ஒரு வயது முடிந்தபின், செடி ஒன்றுக்கு 200 கிராம் தழைச்சத்து, 200 கிராம் மணிச்சத்து மற்றும் 300 கிராம் சாம்பல் சத்து என்ற அளவிலும், இதையே வருடம் ஒன்றுக்கு 200:200:300 கிராம் என்ற அளவில் கூட்டி, 5 வருடங்களுக்குப்பிறகு, 1 கிலோ தழைச்சத்து, 1 கிலோ மணிச்சத்து மற்றும் 1.5 கிலோ சாம்பல் சத்து என்ற அளவில் இடவேண்டும். மக்கிய தொழு உரம் ஒரு செடிக்கு 30 முதல் 50 கிலோ என்ற அளவில் இடுவது நல்லது.

மேற்படி உர அளவை, நீர்ப்பாசன வசதி உள்ள பகுதிகளில் கோடைக் காலத்தில் ஒரு முறையும், மழைக்காலத்தில் ஒரு முறையும் என இரண்டாகப் பிரித்து இடலாம். இதன் மூலம் செடிகளின் வளர்ச்சி சீராக இருப்பதோடு, உர சேதமும் தடுக்கப்படும்.

களைக்கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

ஒட்டுப் பகுதிகளின் கீழே தழைத்து வரும் வேர்ச் செடியின் தளிர்களை அவ்வப்போது அகற்றவேண்டும். தரை மட்டத்திலிருந்து சுமார் 2 அடி உயரம் வரை கிளைகள் எதுவும் பிரியாமல் பார்த்துக்கொள்வது நல்லது. கிளைகள் மரத்தில் சீராகப் பரவி இருக்கவேண்டும்.

சப்போட்டா மரத்திற்கு கவாத்து செய்தல் தேவை இல்லை. உயரமாக வளரக்கூடிய ஒரு சில தண்ணடுகளை மட்டும் நீக்கவிடவெண்டும். அடர்த்தியான, நிழல் விழும் கிளைகளையும் நீக்கவிடவும்.

ஊடுபயிர் பாதுகாப்பு

மொட்டுப்புழு:

பாசலோன் 35 ஈசி 2 மிலி / லிட்டர் (அ) பாஸ்போமிடான் 40 எஸ்.எல் 2 மிலி / லிட்டர் (அ) என்டோசல்பான் 35 ஈசி 2 மி.லி / லிட்டர் (அ) 5 சதவிகிதம் வேப்பங்கொட்டை சாறு தெளித்து கட்டுப்படுத்தலாம்.

பிணைக்கும் புழு:

பாசலோன் 35 ஈசி 2 மிலி / லிட்டர் தெளிக்கவும்.

கம்பளிப்புழு:

குளோரிபைரியாஸ் 20 ஈசி (அ) என்டோசல்பான் 35 ஈசி (அ)  பாசலோன் 35 ஈசி 2 மிலி / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

நோய்கள்

கரும் பூஞ்சாண நோய்

1 கிலோ மைதா (அ) ஸ்டார்ச் வினை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவேண்டும். அரியபின் 20 லிட்டர் தண்ணீரில் (5 %) கலந்து தெளிக்கவேண்டும். மேகமூட்டம் இருக்கும் போது தெளிக்கக் கூடாது.

அறுவடை

முதிர்ந்த காய்கள் வெளிரிய பழுப்பு நிறத்தில் இருக்கும். அதன் சதைப் பகுதி வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும் பொழுது அறுவடை செய்யவேண்டும். பொதுவாக பழங்கள் பிப்ரவரி - ஜீன் மற்றும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் அறுவடைக்கு வரும்.

அறுவடை செய்த பழங்களை 5000 பி.பி.எம் எத்ரல் + 10 கி சோடியம் ஹடிராக்ஸைடு கலவையினுடன் காற்றுப் புகாத அறையில் வைக்கவேண்டும்.

மகசூல்: 20 - 25 டன் / ஒரு எக்டர் / ஒரு வருடம்

 

click me!