மாதுளை
** மாதுளை காய்ந்த, நோய் தாக்கிய குறுக்கு நெடுக்குமாக வளர்ந்துள்ள கிளைகள் மற்றும் போத்துக்களை நீக்கிவிடவேண்டும்.
undefined
** புதிய கிளைகளில் பழங்கள் தோன்றும். எனவே புதிய கிளைகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த பழங்களை அறுவடை செய்த பிறகு டிசம்பரில் பழைய கிளைகளை மூன்றில் ஒரு பகுதி நீக்கிவிடவேண்டும்.
** பூக்கள் அதிகமாக இருந்தால் போதிய எண்ணிக்கை விட்டு, மீதமுள்ளவற்றை நீக்கிவிட்டால் பெரிய பழங்களைப் பெறலாம்.
** திரவ பாரபின் ஒரு சதம் மருந்தை ஜூன் மாதத்தில் 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிப்பதன் மூலம் பழங்களில் வெடிப்பு உண்டாவதைத் தடுக்கலாம்.
எலுமிச்சை
** எலுமிச்சை பூக்கள் பூக்கும் தருணத்தில் காய் பிடிப்பதை அதிகரிக்க 2, 4 டி-20 மில்லிகிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.
** ஜிங்க் சல்பேட் கரைசல் 5 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து ஆண்டுக்கு மூன்று முறை மார்ச், ஜூலை, அக்டோபர் மாதங்களில் தெளிக்க வேண்டும்.
** காய்ந்த கிளைகளை அகற்றி கார்பன்டசிம் 1 கிராம் அல்லது காப்பர் ஆக்சிகுளோரைடு 3 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.