செண்டுமல்லி சாகுபடி எப்படி செய்யலாம்?

 |  First Published Oct 21, 2016, 2:52 AM IST



 

நல்ல வடிகால் வசதியுடன் கூடிய எல்லாவகை மண்ணிலும் பயிரிடலாம். களர், உவர் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றதல்ல. சீரான மிதவெப்ப நிலை அவசியம். சமவெளி மற்றும் மலைப்பிரதேசங்களில் பயிரிடலாம். ஆண்டு முழுவதும் அனைத்துப் பருவங்களிலும் பயிரிடலாம்.

பிரத்யேக ரகம் - மேக்ஸிமா யெல்லோ. நிலத்தை நன்கு உழுது கடைசி உழவின்போது எக்டருக்கு 25 டன் மக்கிய தொழுஉரம் இடவேண்டும். பின் 15 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.

விதையளவு: 

எக்டருக்கு 15 கிலோ.நடும் பருவம்: ஆண்டு முழுவதும். இருந்தாலும் ஜூன் - ஜூலை மாதங்கள் நடவு செய்ய ஏற்றது.

நாற்றங்கால்: 

நிலத்தை 2-3 முறை நன்கு உழுது கடைசி உழவின்போது மக்கிய தொழு உரம் இட்டு நன்கு கலக்கிவிட வேண்டும். விதைகளை 200 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு நேர்த்தி செய்து பின் 15 செ.மீ. இடைவெளியில் விதைகளை வரிசையில் பாத்திகளில் விதைக்க வேண்டும். மண் கொண்டு மூடி உடன் நீர் பாய்ச்ச வேண்டும். 7 நாட்களில் முளைத்துவிடும். 30 நாட்கள் ஆனவுடன் நாற்றுக்களை பிடுங்கி நடவேண்டும்.

நடவு: 

வரிசைக்கு வரிசை 45 செ.மீ. செடிக்கு செடி 30 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: ஒரு எக்டக்கு 45 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடியுரமாக இடவேண்டும். நட்ட 45 நாட்கள் கழித்து எக்டருக்கு 45 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தினை இட்டு மண் அணைக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்: 

நட்டவுடன் ஒரு தண்ணீர் பின்னர் 3ம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.நுனி கிள்ளுதல்: நட்ட 30 நாட்களில் செடியின் நுனிப்பகுதி அல்லது முதல் பூ மொட்டுக்களை கிள்ளி எடுக்க வேண்டும்.

Tap to resize

Latest Videos

click me!